கல்லாற்றில் தடுப்பு அணை, ஜவ்வரிசி ஆலை - ஐஜேகே வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் வாக்குறுதி.

கல்லாற்றில் தடுப்பு அணை, ஜவ்வரிசி ஆலை - ஐஜேகே வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் வாக்குறுதி.

திருச்சி மாவட்டம் பூலாம்பாடி கிராமத்தில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் பரப்புரை மேற்கொண்டார். அப்போது தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் பொதுமக்கள் மத்தியில் கூறுகையில்..... வரும் தேர்தலில் தன்னை தேர்ந்தெடுத்தால் நிச்சயமாக ரயில்வே திட்டம் நிறைவேற்றப்படும் என கூறினார். தொடர்ந்து ஆயிரத்து 200 மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி திட்டம் தொடரும் எனவும், ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு இலவச மருத்துவம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார். மேலும் கல்லாற்றில் தடுப்பணை, அரசு ஜவ்வரிசி ஆலை, அரசு தொழிற்பயிற்சி நிலையம் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என கூறினார்.

இந்நிகழ்வில் பாஜக மாவட்ட தலைவர் செல்வராஜ், ஓ.பி.எஸ் அணி மாவட்ட பொறுப்பாளர் - RT இராமச்சந்திரன் அ.ம.மு.க மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன், பா.ம.க மாவட்டச் செயலாளர் செந்தில்குமார், த.மா.கா. மாவட்ட தலைவர் கிருஷ்ண ஜனார்த்தனன், த.ம.மு .க வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் புரட்சி முத்தரையர் முன்னேற்ற சங்கம் IJK மாநில பொதுச் செயலாளர் ஜெயசீலன், முதன்மை செயலாளர் சத்தியநாதன், மாநில விளம்பர பிரிவு செயலாளர் முத்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் பரப்புரையில் கலந்து கொண்டனர்.

 

இதனை தொடர்ந்து அரும்பாவூர் பகுதியில் பரப்புரை மேற்கொண்ட பாரிவேந்தார், தன்னை தேர்ந்தெடுத்தால் யாரும் முடிக்காத 50 ஆண்டு கால கனவு திட்டமான ரயில்வே திட்டம் கொண்டு வரப்படும் என உறுதி அளித்தார். பொதுமக்கள் நல்ல நாடாளுமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இறுதியாக கிருஷ்ணாபுரத்தில் பரப்புரை மேற்கொண்ட பாரிவேந்தர்..... உங்கள் பிள்ளைகள் படிக்க வேண்டுமென்றால் கல்விக்கான சரஸ்வதி அமர்ந்திருக்கும் தாமரைக்கு வாக்களியுங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.

சுட்டெரிக்கும் சூரியனை மறந்து விடுங்கள் என வலியுறுத்தினர். கிருஷ்ணாபுரத்தில் வட்டார தலைமை மருத்துவமனை கூடுதல் படுக்கை வசதிகளுடன் ஏற்படுத்தி தரப்படும் என பாரிவேந்தர் உறுதி அளித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision