தேசிய விளையாட்டு தினம் - விழிப்புணர்வு ஏற்படுத்திய தேசிய கல்லூரி உடற்கல்வி ஆராய்ச்சி துறை
புகழ் பெற்ற ஹாக்கி வீரர் தயான் சந்த்தின் பிறந்தநாளான ஆகஸ்டு 29-ம் தேதி தேசிய விளையாட்டு தினமாகக் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தேசிய கல்லூரியில் உடற்கல்வி ஆராய்ச்சி துறை சார்பில் விளையாட்டின் முக்கியத்துவத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் தேசிய கல்லூரியின்கல்லூரி துணை முதல்வர் பிரசன்னா பாலாஜி தலைமையில் மாணவ, மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் நீதிமன்றம் அருகே உள்ள ஸ்டூடண்ட்ஸ் சாலையில்
இந்திய ஹாக்கிக்காக அரும்பாடுபட்ட தயான் சந்த்தின் வாழ்க்கை வரலாறு, அவரின் சாதனைகள் குறித்த பாதகைககளை ஏந்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO