அதிமுகவை ஒழித்துவிடலாம் என பகல் கனவு காண்கிறது திமுக என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திருச்சியில் பேட்டி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக பிரமுகரை தாக்கி சட்டையை கழற்றி அழைத்து வந்தது உள்ளிட்ட
3 வழக்குகளில் கைது செய்யப்பட்டு சென்னை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமினில் வெளி வந்துள்ள நிலையில் திருச்சி கண்டோன்மென்ட்(சட்டம் ஒழுங்கு) காவல் நிலையத்தில் ஆய்வாளர் சேரன் முன்னிலையில் கையெழுத்திட்டார் .
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்......2021 சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தாலும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் அதிமுகவுக்கு 3% மட்டுமே வாக்கு வித்தியாசம். 2024 பாராளுமன்ற தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெறும். 2026 ஆம் ஆண்டு மீண்டும் அதிமுக ஆட்சியை கைப்பற்றும் என்றார்.
அதிமுக மீது பொய் வழக்குகள் போட்டு அழித்துவிடலாம் ஒழித்துவிடலாம் என்பது பூனை பகல் கனவு கண்டது போல் இருக்கிறது. இந்த பகல் கனவு பலிக்காது கழக முன்னோடிகள் மீது பொய் வழக்கு போட்டு அதிமுகவை அழித்துவிடலாம் என நினைப்பது ஒரு போதும் நடக்காது என்றார்.
தமிழகம் முழுவதும் ரவுடிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என தமிழக முதல்வர் குறிப்பிட்ட கேள்வி குறித்து கேட்டபோது இதற்கு நையாண்டியாக சந்திரபாபு பாடலை சிரிப்பு வருது சிரிப்பு வருது....பாடிக் காண்பித்து ஊருக்குதான் உபதேசம். அவரே ஒத்துக் கொள்கிறார் தொண்டர்களை அல்ல குண்டர்களை கொண்ட நிலை கொண்ட கட்சி திமுக என முதல்வர் ஒத்துக்கொண்டு விட்டார் .
சமூக விரோதிகள் பல வாக்குச்சாவடிகளை கைப்பற்றினர். வழிப்பறிக் கொள்ளைகள் என அனைத்து குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களாக இருந்தால்தான் திமுகவில் சேர அடிப்படை தகுதி என முதல்வரே சர்டிபிக்கேட் கொடுப்பதாக குறிப்பிட்டுள்ளார் என பதிலளித்தார்.அதிமுகவில் ஒற்றை தலைமை என்பது தவறான கருத்து . அரசியலில் வெற்றி தோல்வி என்பது இருபக்க நாணயம் போன்றது. ஒரு தோல்வியை வைத்து கட்சி எடை போட முடியாது.
கட்சி கட்டுப்பாட்டை மீறி யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஓபிஎஸ் என் சகோதரரே கட்சியிலிருந்து நீக்கபட்டுள்ளார்.
போஸ்டர் ஒட்டுவது இதுபோன்ற செயலில் ஈடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் (திங்கள், புதன் ,வெள்ளி) திருச்சியிலேயே தங்கியிருந்து கையெழுத்திட நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. திருச்சி கண்டோன்மென்ட் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கையெழுத்திட வந்த பொழுது அதிமுகவினருக்கு ஏராளமானோர் திரண்டு வந்திருந்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/KeRJArqMYOdAL0GvJhgfL8
#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO