பள்ளி மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்லும் உலா அமைப்பு
பள்ளிப் பருவத்திலேயே நம்முடைய வரலாறு, பண்பாடு, கலாச்சாரம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது. இதற்காகவே புதுக்கோட்டையில் 'உலா' என்ற அமைப்பு அரசுப் பள்ளி மாணவர்களை வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்கள், கோட்டைகள் என அழைத்துச் சென்று வருகின்றனர்.
திருச்சியை சேர்ந்த பி எஸ் ஆர் அறக்கட்டளை வாய்ஸ் அறக்கட்டளை மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த பிரபாகரன் புரட்ச விதைகள் அமைப்பு ஆகியன இணைந்து உலா என்ற சுற்றுலா நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். கடந்த மாதம் புதுக்கோட்டை அரசு பார்வையற்றோர் பள்ளியில் பயிலும் 25 மாற்றுத்திறன் கொண்டவர்கள் முதல்முறையாக உணர்திறன் கல்வி சுற்றுலாவக்கு சென்று வந்துள்ளனர்.
அதேபோல தற்போது மரிங்கிப்பட்டி அரசுப் பள்ளி நிர்வாகத்தின் அனுமதியோடு பள்ளி மாணவ, மாணவிகளை நீர் மேலாண்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கவிநாடு கண்மாய், அந்த கவிநாடு கண்மாய்க்கே தண்ணீர் வரும் சேந்தமங்கலம் அணைக்கட்டு ஆகியவற்றை பார்க்க வைத்ததோடு தமிழர்களின் தொன்மை வரலாற்றை அறிந்துகொள்ள நார்த்தாமலை விஜயாலய சோழீஸ்வரம் அழைத்துச் சென்று சுற்றிக் காட்டினார்கள்.
ஒவ்வொரு மாதமும் ஒரு அரசுப் பள்ளி மாணவர்களை இப்படியான சுற்றுலா அழைத்துச் செல்வதே உலாவின் நோக்கம் என்கிறார்கள். ஏற்பாடுகளை புதுகை செல்வா, வீரா, ப்ரீத்தி, ஷேக் ஆகியோர் செய்திருந்தனர்.
இந்த சுற்றுலா குறித்து வாய்ஸ் அறக்கட்டளை தலைவர் பிரீத்தி கூறுகையில்......பார்வை திறன் இல்லாத இந்தக் மாற்றுத்திறனாளி சிறார்கள் இதுவரை எங்கும் பயணம் செய்தது கிடையாது இவர்களுக்கு பயணம் புதிது.இந்த உணர்திறன் சுற்றுலா பயணம் அவர்களுக்கு ஒரு வித புத்துணர்வு அளிக்கும் அந்த நோக்கிலேயே இந்த அமைப்பு தொடங்கப்பட்டது இதற்காக பல தன்னார்வலர்களும் உதவி வருகின்றனர என்றார்.
உலா அமைப்பு மூலம் பொது மக்களும் தங்களுடைய சுற்றுலா பயணங்களை மேற் கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து தருகிறோம் அதிலிருந்து கிடைக்கும் நிதி மூலமே இந்த மாணவர்களுடைய சுற்றுலாவை நாங்கள் ஏற்பாடு செய்து வருகின்றோம் என்றார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO