காய்கறி சந்தை மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் கொரோனா பரிசோதனை

காய்கறி சந்தை மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் கொரோனா பரிசோதனை

திருச்சி மாநகராட்சி காய்கறி சந்தை மற்றும் சூப்பர் மார்க்கெட் பகுதியில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்ற பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். காந்தி மார்க்கெட்டில் உள்ள மீன் சந்தைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் இருப்பவர்கள் என கிட்டத்தட்ட 60 க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறையை சேர்ந்தவர்கள் கடந்த இரண்டு நாட்களாக சூப்பர் மார்க்கெட் பகுதிகளில் பரிசோதனை  மேற்கொண்டு வருகின்றனர். பால் பண்ணை மற்றும் அரியமங்கலம் பகுதிகளிலுள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் 140க்கும் மேற்பட்ட மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பரிசோதனையின் முடிவில்  நோய்த்தொற்று உறுதி செய்யப்படும் எனில் அப்பகுதியில் கடைகள் மூடப்பட்டு நோய்த்தொற்று பரவாத வண்ணம் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறுகின்றனர்.

தனிமைப்படுத்துதல், முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை மக்கள் பின்பற்றினாலே நோய் தொற்றை குறைக்கலாம். ஆனால் இதுபோன்ற நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டுவதால் நோய்த் தொற்று அதிகரிக்க காரணம்  என்கின்றனர்.

இது குறித்து மாநகர சுகாதாரத்துறை அலுவலர் யாழினி கூறியதாவது... தினமும் சோதனைக்கு உட்படுத்தும் மாதிகள் 850ல் இருந்து 1700 ஆக இரட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் பரிசோதனை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. நடமாடும் மருத்துவக் குழுக்கள் 80க்கும் மேற்பட்ட மாதிரிகளை சேகரிக்கின்றனர். பரிசோதனை மாதிரிகள் அதிகரிக்கும் அதே நேரத்தில் உறுதிப்படுத்தப்படும் தொற்று எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81