திருச்சியில் 12 மணி நேர வேலை நேரத்தை கண்டித்து ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்

திருச்சியில் 12 மணி நேர வேலை நேரத்தை கண்டித்து ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்

எட்டு மணி நேர வேலை பறிப்பு.... தமிழ்நாடு முழுவதும் ஏஐடியுசி ஏப்ரல்21ல் கண்டன ஆர்ப்பாட்டம். திருச்சியில் நடைபெற்றது ‌.

எட்டு மணி நேர வேலைக்காக நடத்தப்பட்ட போராட்டங்களின் நினைவாக மே தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் சென்னை கடற்கரையில் தான் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் முதல் முறையாக மே தினத்தை 1923ல் கொண்டாடினார். 

அதன் நூற்றாண்டு நிறைவு இந்த மே தினம். அதே கடற்கரையில் அமைந்திருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் 8 மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்கும் மசோதா நிறைவேற்றப்படுவது

தமிழ்நாடு அரசுக்கு அழகல்ல! எனவே தமிழ்நாடு அரசின் தொழிற்சாலைகள் சட்ட திருத்த மசோதாவை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்கள் தொழில் மையங்களில் ஏஐடியுசி சார்பில் ஆர்ப்பாட்டம் .

நடைபெறுவதை யொட்டி திருச்சி மாநகரில் மரக்கடை ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகில் மாவட்ட செயலாளர் அன்சர்தீன் தலைமையில் அபுதாகிர், சுரேஷ் முத்துசாமி, சொக்கி என்கிற சண்முகம், சந்திர பிரகாஷ், நிர்மலா, கதிர் வடிவேல், செம்பட்டு ராஜா முன்னிலையில் மாவட்ட பொதுச் செயலாளர் க. சுரேஷ் தலைவர் நடராஜா பொருளாளர் ராமராஜ் துணைத் தலைவர் சிவா போக்குவரத்து பழனிச்சாமி உள்ளிட்டோர் உரையாற்றினர். கொடாப்பு சுமதி நன்றி கூறினார்.

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

 

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn