திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டாம் கட்ட கள ஆய்வு
திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டாம் கட்ட கள ஆய்வு
திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் NH81 தொடர் விபத்து பகுதியான திருப்பராய்துறை பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலை பாதுகாப்பு கட்டமைப்புகளை நிறுவ கோரி திருப்பராய்துறை பகுதியில் வசிக்கும் சாலை பயனீட்டாளர் நலக்குழுவை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கி.தங்கராஜ், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், பள்ளிக்கல்வித்துறை, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலம், பிரதம மந்திரி அலுவலகம், மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம்,தமிழக முதல்அமைச்சர் அலுவலகம், தமிழ்நாடு போக்குவரத்து கழகம் கும்பகோணம் போன்ற அலுவலகங்களுக்கு மின்னஞ்சல் மற்றும் புகார் மனுக்கள் அனுப்பபட்டுள்ளது. தினந்தோறும் பள்ளி நேரங்களில் காலை மாலை இரு வேளை சாலை ஒழுங்குப்படுத்த சுங்கச்சாவடி பணியாளர்கள், காவல்துறையினர் பணி செய்து வருகின்றனர். அதை தொடர்ந்து இன்று (06.11.23) இன்டர்நேசனல் கார்ப்பரேசன் NH 67 திருச்சி - கரூர் பிரிவு அணித் தலைவர் மணிமாறன் தலைமையில் திருப்பராய்துறை பகுதியில் சாலை பாதுகாப்புகளை நிறுவுவதற்க்கான இரண்டாம் கட்ட கள ஆய்வுகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜீயபுரம் உட்கோட்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர் வெங்கடேசன், மனுதாரர் தங்கராஜ், சாலை பயனீட்டாளர் நலக்குழு அய்யாரப்பன், திருப்ராய்த்துறை ஊராட்சி தலைவர் பிராகாசமூர்த்தி, வார்டு ஊறுப்பினர் சுரேஷ்குமார், முன்னாள் தலைமை ஆசிரியர் ரெங்கசாமி, சிவனடியார் லெட்சுமணன், கார்த்திகேயன், நவநீதகிருஷ்ணன், தாயுமானவன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.