திமுக பூத் ஏஜெண்டுகள் ஆலோசனைக் கூட்ட ஏற்பாடுகளை அமைச்சர் நேரில் ஆய்வு

திமுக பூத் ஏஜெண்டுகள் ஆலோசனைக் கூட்ட ஏற்பாடுகளை அமைச்சர் நேரில் ஆய்வு

திருச்சியில் டெல்டா மண்டல திமுக பூத் ஏஜெண்டுகள் ஆலோசனை கூட்டம் வரும் 26 ஆம் தேதி நடக்கிறது.திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடக்க உள்ள இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை முதன்மை செயலாளர் நேரு நேரில் ஆய்வு செய்தார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்த்தல் முழுமையாக பூத் கமிட்டி அமைத்தல் ஆகிய பணிகளில் திமுக தீவிரம் காட்டி வருகிறது.

இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்த்துள்ள நிலையில் ஒவ்வொரு ஓட்டு சாவடிகளுக்கும் பூத் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் சரிபார்க்கப்பட்ட பூத் பொறுப்பாளர்களுக்கு மாநிலம் முழுக்க மாவட்டங்களை 5 மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டல வாரியாக பூத் பொறுப்பாளர்களுக்கு ஒரு நாள் பயிற்சி கூட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி டெல்டா மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் பூத் பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம் வரும் 26 ஆம் தேதி திருச்சி ராம்ஜிநகரில் நடக்கிறது இதில் அரியலூர், பெரம்பலூர், கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, மயிலாடுதுறை நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் மத்திய, தஞ்சாவூர் தெற்கு, திருச்சி தெற்கு, திருச்சி மத்திய, திருச்சி வடக்கு, புதுக்கோட்டை தெற்கு,

புதுக்கோட்டை வடக்கு ஆகிய 15 மாவட்டங்களின் செயலாளர்கள் பூத் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மாலை ஐந்து மணிக்கு திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் நிறைவுறையாற்றுகிறார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision