எம்.பி பெண் என்பதால் விட்டு வைக்கிறேன் - பிழைத்துப் போகட்டும் - திருச்சியில் அண்ணாமலை கடும் ஆவேசம்.

எம்.பி பெண் என்பதால் விட்டு வைக்கிறேன் - பிழைத்துப் போகட்டும் - திருச்சியில் அண்ணாமலை கடும் ஆவேசம்.

கரூர், புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களில் நடை பயணம் மேற்கொண்டுள்ள அவர், இன்று திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது..... தமிழகத்தில், பா.ஜ.க நேரடியாக அதிகாரத்தில் இல்லை. மத்திய அரசாங்கத்தால், எதை எதை செய்ய முடியுமோ, அதை செய்து கொண்டிருக்கிறோம். மற்ற பிரச்னைகளுக்கு மக்கள் சார்பாக, நாங்கள் போராடுகிறோம். 

தமிழகத்தில், பல பகுதிகள் பின் தங்கியிருக்கிறது. இலுப்பூர், தோகைமலை போன்ற சிறு சிறு பகுதி மக்களை, வளர்ச்சி என்பது தொடமலேயே போய் விட்டது. நம்பிக்கையோடு எங்களிடம் வருபவர்களுக்கு, நாங்கள் செய்து கொடுக்கிறோம். போலீஸ் துறையின் கவனம் சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதில் இல்லை. சிதறிப் போய் விட்டது. அமைச்சர்கள் உதயநிதி, சேகர் பாபு ஆகியோர் மீது தமிழக போலீஸ் துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தமிழக போலீஸ் துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது தவறு, என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது. தி.மு.க., ஆட்சியில், தமிழக போலீஸ் துறை, நடுநிலை தவறி விட்டது. பா.ஜ.க கட்சிக்காரர்களை கைது செய்வது மட்டுமே தமிழக போலீசின் குறிக்கோளாக உள்ளது. 

பொதுமக்கள், சட்டத்தை கையில் எடுப்பது தவறாகி விடும். பஸ்சில் மாணவர்கள் தொங்கிச் சென்றதை பார்த்த பா.ஜ., கட்சியை சேர்ந்த சகோதரி நடந்து கொண்ட விதம் பற்றி விவாதிக்கலாம். அதே சமயம், கேள்வி கேட்டதை தவறு என்று சொல்லமாட்டேன். பஸ் டிரைவரோ, கண்டக்டரோ கண்டு கொள்ளாததால், சமூக அக்கறையால் அவர், மாணவர்களை கண்டித்திருக்கிறார். சாமான்ய மக்களை கைது செய்வதன் மூலம், தமிழக போலீஸ் துறையின் மாண்பு குலைந்து கொண்டிருக்கிறது. ஆர்.எஸ்.பாரதி பேசியதை தி.மு.க., மாற்ற முயற்சிக்கிறது. அவர் பேசியதை விட, ஒரு சமுதாயத்தை கேவலமாக, மோசமாக யாரும் பேசமுடியாது. கடந்த 30 மாதங்கமாக, அப்படித்தான் பேசுகிறார். ரோட்டில் செல்லும் பொறுக்கி கூட, அந்த மாதிரி பேச மாட்டான். தி.மு.க.,வின் சொத்தே ஆபாசமாக பேசுவது தான். அதனால், அவரது பேச்சுக்கு சப்பைக்கட்டு கட்டாமல், ஆர்.எஸ்.பாரதியை உடனடியாக கைது செய்ய வேண்டும். நாகலாந்து மக்கள் புகார் கொடுத்து, அங்குள்ள போலீசார் வழக்கு பதிந்து, அவரை கைது செய்வதற்கு முன், தமிழக போலீஸ் கைது செய்ய வேண்டும். அவரது பேச்சில், கவர்னரையும், என்னையும் தவறாக பேசியிருப்பார். தி.மு.க.,வினர் பேசுவதை பற்றியெல்லாம், நான் கண்டுகொள்வதில்லை. பொதுவெளியில் ஒரு கேள்வி கேட்கும் போது, அவதூறாக பதில் சொல்லலாம், என்று அரசியல்வாதிகள் நினைக்கின்றனர். டில்லியில் இருந்து அரசியல் செய்யும் ஜோதிமணி போன்றவர்களை மதித்து, அவர் மீது வழக்கு போட்டு, நீதிமன்ற நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. 

பா.ஜ.க தினமும் கூட்டம் கூட்டுவது போல், காங்கிரஸ் கட்சியினர் கூட்டம் கூட்ட முடியுமா? அரசியல் கட்சியினர் போகாத ஊர்களுக்கு எல்லாம் சென்று கூட்டம் போடுகிறோம். காங்கிரஸ் கட்சியில் இருந்த தொ"லண்டர்கள், பா.ஜ.,வுக்கு வந்து விட்டதால், அங்கு தலைவர்கள் தான் அதிகம் உள்ளனர். வேலை இல்லாததால் தான், ஜோதிமணி அப்படி பேசியிருக்கிறார். 

பெண்கள் மீது கண்ணியம் கட்டும் நான், தரம் குறைந்த விமர்சனம் செய்யும் ஜோதிமணியை பற்றி தவறாக பேச விரும்பவில்லை. 

ராகுலும், ஜோதிமணியும் சேர்ந்து கர்நாடகாவில் வசூல் வேட்டை நடத்தினார்கள் என்று சொன்னால் தவறாக போய் விடும். வாய்க்கு வந்ததை நான் சொல்ல மாட்டேன்.

கர்நாடகா தேர்தலின் போது, ஜோதிமணிக்கு சிவக்குமார் தான் பணம் அனுப்பினார். அதற்கான ஆதாரம் உள்ளது. தேவைப்பட்டால் தருவேன். பெங்களூருவில் போலீஸ் அதிகாரியாக இருந்த எனக்கும், ஜோதிமணி யாரிடமிருந்த பணத்தை வாங்கி வந்தார் என்பதெல்லாம் எனக்கு தெரியும். பெண் என்பதால் விட்டு வைக்கிறேன். பிழைத்துப் போகட்டும் என்று, அவர் தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்

 அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision