அடிமனை பிரச்சினை - தீர்மானம் நிறைவேற்றம்
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் பகுதிகளில் உள்ள பெரும்பாலான இடங்கள் தற்பொழுது கோவிலுக்கு சொந்தம் என மக்கள் பூர்வீகமாக சுமார் நூறு வருடங்களாக இங்கு பதிவு ஆவணங்களும் வாழ்ந்து வரும் இடங்களை ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகமும் தற்பொழுது புதியதாக திருவானைக்காவல் கோயில் நிர்வாகம் சொந்தம் கொண்டாடி இந்த இடங்களில் புதிய பெயரில் தனியார் பெயரில் எந்தவிதமான பதிவு ஆவணங்களும் பதிய கூடாது எனவும், பட்டா பெயர் மாற்றம், வங்கி கடன் போன்றவைகள் வழங்கக் கூடாது எனவும் தடையானைகளை ஸ்ரீரங்கம் சார் பதிவாளர் அலுவலகத்திலும் வட்டாட்சியர் அலுவலகத்திலும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்ட வார்டு குழு- 1 அலுவலகத்திலும் கொடுத்துள்ளனர்.
எனவே இது சம்பந்தமான இதனால் பாதிக்கப்பட்ட மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இது சம்பந்தமாக அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என்பதை பற்றி ஆலோசிக்கவும் இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மக்கள் சார்பாக மாபெரும் ஆலோசனைக் கூட்டம் திருவானைக்காவல் 6 நாட்டு வெள்ளாளர் சத்திரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஸ்ரீரங்கம் பகுதி அடிமனை உரிமை போராளியும், ஸ்ரீரங்கம் மக்கள் நலச்சங்கத் தலைவருமான முனைவர் S.N. மோகன்ராம் தலைமை வகித்தார். இதற்கு கொ.பேட்டை K.பன்னீர்செல்வம் முன்னிலையும், கவிஞர் TCP லோகநாதன் வரவேற்புரை ஆற்றினார்கள். இக்கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளர்களாக மாமன்ற உறுப்பினர் அப்பீஸ் முத்துக்குமார், தீட்சதர் பாலசுப்ரமணியம், K. கனகராஜ் ExMC, T.S.காமராஜ், S.பரமசிவம், S.K.ராஞ், N.சந்திரசேகர், சிவாஜி சண்முகம், மாருதி P.ராமசாமி, சிட்டிசன் காமராஜ், பிரஸ் S.வெங்கடேசன், N.P.ரவிசங்கர், கலைமணி, தாம்பிராஸ் அய்யப்பன், விதுரன் பத்திரிகை ஆசிரியர் ப்ரித்தி கார்த்திக், ஆனந்த ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள்.
இதில் TV. கோவில் பகுதியின் முன்னாள் VAOவும், டாக்குமென்ட் ரைட்டாகவும் உள்ள மூத்த வழிகாட்டி சண்முக பிள்ளை பல்வேறு ஆதாரங்களை மக்களுக்கு ஆதரவாக எடுத்து கூறி வழிகாட்டினார்கள். இந்த ஆலோசனைக்கூட்டத்தில் TV- கோவில் அனைத்து பகுதியிலும் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சி, அமைப்புகள் பேதமின்றி கலந்து கொண்டு சிறப்பித்து ஆலோசனைகளை வழங்கினார்கள். இந்த மாபெரும் ஆலோசனைக் கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள் :
1. இந்த நில உரிமை பிரச்சனைக்காக இதனால் பாதிக்கப்பட்டுள்ள நாம் அணைத்து பகுதி மக்களையும் ஒருங்கிணைத்து ஒரு ஒருங்கிணைப்பு குழு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.
2. நமது இந்த நில உரிமை பிரச்சனையை தீர்க்க நீதிமன்றத்திற்கு செல்ல வேண்நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டாம் எனவும், முதலில் இந்த நில உரிமை பிரச்சனையை கோவில் நிர்வாகங்களின் அத்துமீறலை முறையான வழியில் நியாயமான முறையில் தீர்ப்பதற்காக இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக அரசு அதிகாரிகளிடமும் HR - CE அதிகாரிகளிடமும் நமது திருச்சி மாவட்டத்தின் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேருவை நேரில் சந்தித்து மனு கொடுத்து இதற்காக இந்த பிரச்சனையை தீர்த்து தரும்படி முறையிடுவதெனவும் தீர்மானிக்கப்படுகிறது.
3. இப்பிரச்சனை தீர உரிய கால அவகாசத்திற்கு பிறகும் எந்த நடவடிக்கையும் இதற்கு அரசு அதிகாரிகள் எடுக்க முன்வரவில்லை என்றால் இங்கு பாதிக்கப்பட்ட மக்களை ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டம், போராட்டம், சாலை மறியல் நடத்தவது வரும் பாராளுமன்ற தேர்தல் புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தின் முடிவில் இது வெற்றிகரமாக நடப்பதற்கு ஒத்துழைப்பு கொடுத்து சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்ய உதவிய அனைவருக்கும் திருச்சி 5வது வார்டு மாமன்ற உறுப்பினர் அப்பீஸ் முத்துக்குமார் நன்றியுரை வழங்கினார்.