சட்டமேதை அம்பேத்கர் 68வது நினைவு தினம் - அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
சட்ட மாமேதை அம்பேத்கர் 68வது நினைவு நாளை முன்னிட்டு திமுக திருச்சி மாவட்டக் கழகச் செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி திருச்சி தெற்கு மாவட்ட கழகம் சார்பில், திருச்சி இ.பி. ரோட்டில் அமைந்துள்ள சட்ட மேதை அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு மாநகரக் கழகச் செயலாளர் மு. மதிவாணன் தலைமையில், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் கே.என்.சேகரன், சபியுல்லா, மாநில இலக்கிய அணி புரவலர் செந்தில் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்நிகழ்வில் மாவட்டத் துணைச் செயலாளர் மூக்கன், நீலமேகம், தர்மராஜ், பாபு, மோகன், ராஜ்முஹம்மது, விஜயகுமார், மணிவேல், சிவக்குமார் வட்டக் கழகச் செயலாளர் மனோகர் மற்றும் மாவட்ட, மாநகர, மாநில நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள், மாவட்ட - மாநகர - தொகுதி அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கலந்து கொண்டனர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அரிஸ்டோ ரவுண்டானத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ் மற்றும் கனியமுதன் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் திருச்சி கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், திருச்சி பாராளுமன்ற தொகுதி செயலாளர் தங்கதுரை, தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணைச் செயலாளரும், திருச்சி மாமன்ற உறுப்பினருமான பிரபாகரன், இளம் சிறுத்தைகள் பாசறை மாநில துணைச் செயலாளர் அரசு, பொறியாளர் அணியின் மாநில துணைச் செயலாளர் பில் சந்திரசேகரன் மற்றும் மாநில மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision