காவல் வாகனங்கள் பொது ஏலம் மூலம் விற்பனை - திருச்சி மாநகர காவல்துறை அறிவிப்பு
திருச்சி மாநகர காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட, நான்கு சக்கர காவல் வாகனம்-1 (Bolero Jeep-1) மற்றும் இருசக்கர வாகனம்-2 (Bajaj Pulsar- 1, TVS Apache-1) ஆக மொத்தம் 03 காவல் வாகனங்கள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
மேற்படி வாகனங்களின் பொது ஏலம் வருகின்ற (23.12.2024) ஆம் தேதி காலை 10:00 மணியளவில் திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. ஏலம் எடுக்க விரும்புவோர் (19.12.2024)-ம் தேதி காலை 10:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள காவல் வாகனங்களை பார்வையிட்டுக் கொள்ளலாம்.
மேலும் காவல் வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் ஏலம் நடைபெறும் நாளான (23.12.2024) காலை 08:00 மணிமுதல் 10:00 மணிவரை தங்களது ஆதார் அட்டையுடன் ரூபாய் 5000/-முன் பணம் செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ள வேணடும்.
ஏலம் எடுத்த உடன் ஏலத்தொகையுடன் சரக்கு மற்றும் சேவை வரியாக நான்கு சக்கர வாகனத்திற்கு 18% GST தொகையையும், இரு சக்கர வாகனத்திற்கு 12% GST தொகையையும் செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision