திருச்சி பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் உழவாரப்பணி

திருச்சி பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் உழவாரப்பணி

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே பிரசித்தி பெற்ற பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான குளங்கள் மற்றும் மதில் சுவர்கள் சுற்றிய பகுதிகளில் செடிகொடிகள் வளர்ந்து புதர் மண்டிக்கிடந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட திருச்சிற்றம்பலம் உழவாரப்பணி குழுவினர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணியில் ஈடுபட்டனர். இதில் 450க்கும் மேற்பட்ட நபர்கள் ஒரு நாள் முழுவதும் ஈடுபட்ட இந்த உழவாரப்பணியின் போது குளம், மதில் சுவர் மற்றும் கோவிலுக்கு சொந்தமான பல இடங்களில் செடி, கொடிகளை அகற்றி தூய்மைபடுத்தினர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision