திருச்சி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு

திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நேற்று 25/2/2025 செவ்வாய்க்கிழமை அன்று மாண்புமிகு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி குற்றவியல் வழக்கறிஞர் சங்க ஏற்பாட்டில் வழக்கறிஞர்களுக்கான பயிற்சி வகுப்பு.குற்றவியல் நீதி வழங்குவதில் வழக்கறிஞரின் பங்கு என்ற தலைப்பில் வகுப்பு நடைபெற்றது.
வகுப்பினை முதலாவது கூடுதல் உரிமையியல் நீதிமன்றம் மாண்புமிகு நீதிபதி திரு A. பிரபு சங்கர் அவர்கள் நடத்தினார் இந்நிகழ்வில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தின் செயலாளர் P. V. வெங்கட் அவர்கள் வரவேற்றார் இணைச்செயலாளர் விஜய் நாகராஜன் அவர்கள் நன்றி உரை ஆற்றினார்.
பயிற்சி வகுப்பில் 300க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் செய்திருந்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision