திருச்சி மாநகராட்சியில் 43767 தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் சிஸ்டம்

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 65 வார்டுகளிலும் சுற்றித் திரியும் தெரு நாய்களால் வாகனத்தில் செல்பவர்கள், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் பொது மக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதாலும் இதனை கட்டுப்படுத்தகோரி பொதுமக்களிடமிருந்து அதிகமாக புகார்கள் மற்றும் கோரிக்கைகள் மற்றும் இது தொடர்பாக மாநகராட்சியின் மூலம் நடவடிக்கை எடுக்கக்கோரி பத்திரிக்கை செய்திகளிலும் தொடர்ந்து செய்திகள் வெளிவந்ததை தொடர்ந்து தெரு நாய்களுக்கான ABC/ARV பணிகள் மாநகராட்சியின் கோணக்கரை ABC/ARV மையத்தில் பணிகள் நடைபெற்று வந்தது. அவசர அவசியம் கருதி இம்மாநகராட்சியில் மூன்று இடங்களில் ABC/ARV மையங்கள் புதிதாக கட்டப்பட்டு, தற்போது ஆணையர் அவர்களின அறிவுரைப்படி கீழ்க்கண்ட நான்கு ABC/ARV மையங்களில் M/s International Trust of Peace, சென்னை தொண்டு நிறுவனத்தின் மூலம் தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து ரேபீஸ் தடுப்பூசி போடும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோணக்கரை நாய்கள் கருத்தடை மையம் அம்பேத்கார் நகர் நாய்கள் கருத்தடை மையம்அரியமங்கலம் நாய்கள் கருத்தடை மையம்பொன்மலைப்பட்டி நாய்கள் கருத்தடை மையம்இம்மாநகராட்சியில் கடந்த நிதி ஆண்டில் (23-24) 11929 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து ரேபீஸ் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. நடப்பு நிதி ஆண்டில் (24-25) 8892 தெருநாய்களுக்கும் ஆகமொத்தம் 20821 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து ரேபீஸ் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணியின் அவசர அவசியம் கருதி தெரு நாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்து ரேபீஸ் தடுப்பூசி போடும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட 65 வார்டுகளில் சுற்றித்திரியும் தெருநாய்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கும் பணிகள் ஒப்பந்த அடிப்படையில் M/s. ANIMAL HELPING HANDS. திருச்சி நிறுவனித்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டது. 43767 தெருநாய்கள் தற்போது இம்மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ளதாக கணக்கெடுப்பு பணி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.வீடுகளில் வளர்க்கும் நாய்களுக்கு லைசென்ஸ் வழங்குவதற்கு ஏப்ரல் மாதம் முதல் வெப்சைட் துவங்கப்பட உள்ளது.தெருநாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தி காண்காணிக்கும் பணிகள் மாநராட்சியில் மேற்கொள்ளப்பட உள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision