திருச்சி வனத்துறை சார்பில் உலக வன நாள் கொண்டாட்டம்

திருச்சி வனத்துறை சார்பில் உலக வன நாள் கொண்டாட்டம்

திருச்சி மாவட்ட வனத்துறை சார்பில் இன்று (21.03.2024) உலக வன நாள் திருச்சி நாகமங்கலம் பகுதியில் அமைந்துள்ள எஸ் ஃப் எஸ் பப்ளிக் பள்ளியில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட உதவி வன பாதுகாவலர் சரவணகுமார் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சுமார் 250 பள்ளி மாணவ, மாணவிகள் உலக வன நாள் தொடர்பாக காடுகளின் முக்கியத்துவம் மற்றும் அவற்றால் கிடைக்கும் பலன்கள், வனவிலங்குகள் மற்றும் பறவைகளின் வாழ்வாதாரம், நீர் மேலாண்மை, காட்டுத்தீயினால் ஏற்படும் விளைவுகள் ஆகியவை குறித்து விழிப்புணர்வு பெற்றனர்.

பள்ளி முதல்வர் அருட்தந்தை அபின், பள்ளி பொருளாளர் அருட்தந்தை மார்டின் மற்றும் மாணவ மாணவிகள் வனச்சரக பணியாளர்கள் கலந்து கொண்டு பள்ளியில் மரக்கன்றுகளை நட்டார்கள். இந்நிகழ்ச்சியை திருச்சி வனச்சரகர் வா.கோபிநாத் நன்முறையில் செயல்படுத்தினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision