திருச்சி வரும் துணை முதல் அமைச்சரை வரவேற்க கழக நிர்வாகிகளுக்கு அழைப்பு- மகேஷ் பொய்யாமொழி

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில், பேரரசு பெரும்பிடுகு முத்தரையருக்கு மாலை அணிவித்து மரியாதை !தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு !
மாவட்ட செயலாளர் - அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு !திருச்சி பேரரசர் பெரும்பிடுகு முத்திரையர் அவர்களின் 1350 பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் சாலையில் அமைந்துள்ள மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு 23/05/2024 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு, அதனைத் தொடர்ந்து காலை 9:45 மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில்
உள்ள முத்தரையர் மணி மண்டபத்திலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்கள். தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளருமான - உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 23/05/2025 வெள்ளிகிழமை மாலை 5 மணிக்கு திருச்சி - புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமான மூலமாக திருச்சி விமான நிலையம் வர உள்ளார் . திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், அவருக்கு சிறப்பான வரவேற்பு வழங்க உள்ளோம் . கீழ்க்கண்ட அனைத்து நிர்வாகிகளும் விமான நிலையம் வரும்படி அன்போடு கேட்டுக்கொள்கின்றேன் .
இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழகச் செயலாளர்கள், மாவட்ட - மாநகர அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம். என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision