கோவை சம்பவம் திருச்சியில் இருவர் வீட்டில் அதிரடி சோதனை - நான்கு சிம் கார்டுகள், ஒரு செல்போன் பறிமுதல்

கோவை சம்பவம் திருச்சியில் இருவர் வீட்டில் அதிரடி சோதனை - நான்கு சிம் கார்டுகள், ஒரு செல்போன் பறிமுதல்

கோவை சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு முகமை (என்ஐஏ) விசாரணை வளையத்திற்குள் உள்ள நபர்கள், அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில், தமிழக காவல்துறையினர் முன்கூட்டியே விசாரணை நடத்துவதுடன், அந்த இடங்களில் திடீர் சோதனையும் நடத்தி வருகின்றனர்.

அதனடிப்படையில், திருச்சி விமான நிலையம் அருகே வயர்லெஸ் சாலை ஸ்டார் நகரில் வசிக்கும் அப்துல் முத்தலிப் என்பவர் வீட்டில், திருச்சி கே.கே. நகர் சரக உதவி ஆணையர் சுரேஷ்குமார், கண்டோன்மென்ட் உதவி ஆணையர் அஜய் தங்கம் தலைமையிலான போலீசார் இன்று காலை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளுடன் தொடர்புடைய அவரது வீட்டில் வெடிப் பொருட்கள் ஏதும் இருக்கின்றனவா? என்பது குறித்து, மோப்பநாய் ரூபி உதவியுடன், வெடிகுண்டு கண்டறியும் மற்றும் செயலிழக்கச் செய்யும் போலீசார் சோதனை செய்தனர். தடயவியல் நிபுணர்கள், சைபர் கிரைம் போலீசார் என, 25க்கும் மேற்பட்டோர் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில், நான்கு சிம்கார்டுகள், ஒரு செல்போன் ஆகியவற்றை அவரிடம் இருந்து பறிமுதல் செய்தனர். அப்துல் முத்தலீப்பிடம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதேபோல்  திருச்சி கண்டோன்மென்ட் உதவி ஆணையர் அஜய் தங்கம் தலைமையில் எடமலைப்பட்டி புதூரில் வசிக்கும் ஜீபைர் அகமது  வீட்டிலும் சோதனை நடைபெற்று உள்ளது. இவரது வீட்டில் ஏதும் சந்தேகத்துக்கிடமான பொருட்கள் எதுவும் உள்ளதா என்று சோதனை செய்தனர். இன்று காலை ஜூபைர் அஹமது தனியாக எடுத்த ரூம் மதுரை மெயின் ரோடு எடமலைப்பட்டி புதூரில் உள்ளது. அங்கு சோதனை செய்ததில் எந்த பொருளும் கைப்பற்றபடவில்லை.

மேலும் சீனிவாச நகர் கிழக்கு எடமலை பட்டி புதூரில் சோதனை செய்ததில் எந்த பொருளும் கைப்பற்றவில்லை. இவர்கள் 2019 ஆம் ஆண்டு NIA விசாரிக்கப்பட்ட ஷர்புதுனின் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO