லால்குடி அருகே உடும்பினை வேட்டையாடிய இருவர் கைது
திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ் அவர்களின் உத்தரவின்படியும் திருச்சி மாவட்ட வன அலுவலர் கிரண் அவர்களின் அறிவுரையின்படியும் திருச்சி வன சரக அலுவலர் கோபிநாத் தலைமையிலான தனி குழுவினர் லால்குடி குமுழூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று (1/11/22) மதியம் சுமார் 2:30 மணி அளவில் சந்தேகம் படும்படியான இரு சக்கர மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் அவர்களிடம் உடும்பு இறந்த நிலையில் ஒன்று இருந்தது கண்டறியப்பட்டது.
மேலும் விசாரணை செய்ததில் உடும்பினை அருகில் இருந்த வயல்வெளியில் கண்ணி வைத்து வேட்டையாடி எடுத்து வந்தது தெரியவந்தது பின்னர் எதிரி 1.சின்ராசு (22), எதிரி 2.திருமலை (18) புஞ்சை சங்கேந்தி கிராமம் லால்குடி வட்டம் ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து இறந்த நிலையில் 1 உடும்பு, வேட்டையாட பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் 1, கண்ணிகள் 10, அலைபேசி 2 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
எதிரிகள் மீது 1972 வன உயிரின பாதுகாப்பு சட்டம் பிரிவு 2, 9 ,39, 50 மற்றும் 51 கீழ் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது எதிரிகள் இரண்டு பேரும் லால்குடி நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்படுத்தி 14 நாள் அடைப்பு காவல் உத்தரவு பெற்று லால்குடி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்கள். தனிக்குழுவில் பாலசுப்ரமணியன் துளசிமலை வனவர்கள் ஜான் ஜோசப் சித்திக் வனக்காப்பாளர்கள் இடம்பெற்றிருந்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய..... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO