உங்கள் ஏரியாவில் கால்நடைகளால் தொல்லையா? மாநகராட்சியை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்

உங்கள் ஏரியாவில் கால்நடைகளால் தொல்லையா? மாநகராட்சியை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தெருக்கள் மற்றும் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் பொதுமக்களுக்கும், பொது சுகாதாரத்திற்கு கேடு ஏற்பட்டு வருவதை தொடர்ந்து இதனை தடுக்கும் பொருட்டு கால்நடைகளை வளர்க்கும் நபர்கள் தங்களுக்கு சொந்தமான கால்நடைகளை தங்களது வளாகத்துக்குள்ளேயே கட்டிவைத்து சுகாதார முறைப்படி வளர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அவ்வாறு இல்லாமல் போக்குவரத்துக்கு இடையூறாக விபத்துக்களை ஏற்படுத்தும் வகையிலும், தெருக்களிலும், சாலைகளிலும் சுற்றித்திரியும் கால்நடைகளை மாநகராட்சி மூலம் பிடித்துச் செல்வது முதன்முறையாக 10,000 அபராதம் விதித்து அதனை மூன்று நாட்களுக்குள் செலுத்தி சம்பந்தப்பட்ட கால்நடையின் உரிமையாளர் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு உரிமையாளர் பெற்றுக் கொள்ளவில்லை எனில் மாநகராட்சி அருகிலுள்ள கால்நடை சந்தையில் விற்பனை செய்து அத்தொகை மாநகராட்சி கருவூலத்தில் செலுத்தப்படும் என மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கோட்டங்களில் சாலை மற்றும் தெருக்களில் சுற்றித்திரியும் கால்நடை பிடிப்பதற்கு தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்

Ponmalai Zone - 04312319844

Ariyamangalam Zone -  04312467615

Srirangam Zone -  04312432255

Co.Abisekapuram Zone - 04312772098

Main office - 04312415393

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn