திருச்சி மாநகரில் மூன்று கடைகளுக்கு சீல்

திருச்சி மாநகரில்  மூன்று கடைகளுக்கு சீல்

திருச்சிராப்பள்ளி குழுமணி ராஜசேகர் பெட்டி கடை, கோட்டை பகுதியில் உள்ள இந்தியன் டீ மற்றும் பெட்டிக்கடை மற்றும் உறையூர் பகுதியில் உள்ள செந்தில்குமார் மளிகை கடையையும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததினால் குழுமணி காவல் நிலைய ஆய்வாளர் பாலசுப்பிரமணி கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் S.நாகராஜன் மற்றும் உறையூர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜா ஆகியோர் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து நேற்று காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மேற்கண்ட மூன்று கடைகளிலும் (20.09.2022) அன்று தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டு உடனடி அபராதம் (Compounding Offense) விதிக்கப்பட்டு தொடர் குற்றங்களில் ஈடுபட்ட மேலே கண்ட மூன்று உணவு வணிகங்களையும் நேற்று மாலை உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் முன்னிலையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவால் அந்த மூன்று கடைகளும் தற்காலிகமாக சீல் செய்தனர்.

மேலும் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். R. ரமேஷ்பாபு  கூறுகையில்..... திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இதுபோன்று புகையிலை பொருட்களை விற்பனை செய்து தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-இன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு கடை சீல் செய்யப்படும் என்று கூறினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO