கலைக்காவிரி நுண்கலைக்கல்லூரியும் அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழும் இணைந்து நடத்திய கருத்தரங்கு

கலைக்காவிரி நுண்கலைக்கல்லூரியும் அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழும் இணைந்து நடத்திய  கருத்தரங்கு

கலைக் காவிரி நுண்கலைக்கல்லூரியும் அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழும் இணைந்து "நிகழ்கலைகளும் - வாழ்வுலகங்களும் " என்னும் தலைப்பில் ஒரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இக் கருத்தரங்கில் கல்லூரியின் செயலர் அருள்பணி .S.G.சாமிநாதன் தலைமையேற்று வரவேற்புரை யாற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் ப. நடராஜன் முன்னிலை வகித்தார்.

தொடக்க விழா சிறப்பு விருந்தினராக பிசப் ஈபர் கல்லூரி  கணிதத்துறைத் தலைவர் முனைவர் பெருமாள் மாரியப்பன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கருத்தரங்கின் மையக்கருத்துரையை இசைத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ஜோசப் ஜெயசீலன் ஆற்றினார். கருத்தரங்கின் நோக்கவுரையை கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர்நடனத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் லீமாரோஸ் ஆற்றினார்.

அதனைத்தொடர்ந்து மெய்நிகர் வழியாகவும் நேரடியாகவும் கட்டுரை வாசித்தளிக்க அமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டது. 200க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள், ஆய்வு மாணவர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள், பல்துறை சார் கலைஞர்கள் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தனர்.இப்பன்னாட்டுக் கருத்தரங்கில் அயல்நாடுகளில் இருந்து அமெரிக்கா ஜெர்மனி,கத்தார், இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து ஆய்வாளர்கள், கல்லூரிப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் கட்டுரை வழங்கினர்.

அதனைத்தொடர்ந்து மாலை நிறைவு விழாவில் முதல்வர் வரவேற்புரை யாற்றிட அரண் பன்னாட்டுத் தமிழாய்வு நிறுனவத்தின் தலைவரும், எத்திராஜ் கல்லூரியின் தமிழாய்வுத்துறை உதவிப் பேராசிரியருமான முதுமுனைவர் பிரியா கிருஷ்ணன் கலந்துகொண்டு மாநாட்டு நிறைவுரையாற்றினார். அவர்தம் சிறப்புரையில் கொரோனா பெருந்தொற்றுக் காலத்திற்குப் பிறகு குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தப்பட்ட கருத்தரங்கில் 200 க்கும் மேற்பட்டோர் கட்டுரை வழங்கியமை பாராட்டிற்குரியது என்றார். குறிப்பாக நிறைய வளரும் கலைஞர்கள் ஆய்வு மாணவர்கள் பங்கேற்று கட்டுரை அளித்திருப்பது வரவேற்புக்குரியது என்றார். 

எத்தகைய பெரிய ஆய்வாளர்களின் கருத்தாக இருப்பினும் ஆய்வாளர்கள் தாங்கள் அறிந்ததை புரிந்துக்கொண்டதை கண்டறித்து சொல்ல முன்வரவேண்டும். மாற்றுக் கருத்துகளை துணிவுடன் சொல்ல புதிய ஆய்வாளர்கள் அச்சமின்றி வரவேண்டும் என்றார். கலை, இலக்கியம், பண்பாடு, இயல் இசை, நடனம்,நாடகம் தொல்லியல், மொழியியல் என எத்துறையாயினும் தாங்கள் கண்டறிந்த புதிய மாற்றுக் கருத்துகளை இளைய தலைமுறையினர் பதிவு செய்தல் வேண்டும் என்றார். ஆய்வாளர்களுக்கு தாய்மொழியறிவு இன்றி எத்தகைய ஆய்வும் சிறப்புறாது, தொல்லியல் ஆய்வு முடிவுகள் தமிழகத்தின் பழைய வரலாற்றை புதுப்பித்துக் கொண்டு வருகிறது. கீழடி, கொந்தகை, சிவகளை, ஆதிச்சநல்லூர், பொருந்தல் ஆய்வு முடிவுகள் கண்டு தமிழர் நாகரிகத்தின் தொன்மையை உலகம் வியக்கிறது. என்றார்.
ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பாக மின்னூல் வெளியிடப்பட்டது.

பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் கருத்தரங்கின் ஒருங்கினைப்பாளர் முனைவர் லீமாரோஸ், துணை ஒருங்கிணைப்பாளர் இசைத்துறை உதவிப்பேராசிரியர் அதிசயப் பரலோகராஜ் நன்றியுரையாற்றினார்.தமிழ்த் துறை உதவிப்பேராசிரியர் கி.சதீஷ் குமார் தொகுத்து வழங்கினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO