தமிழக வணிகம் விடியல் மாநாடு பந்தல் கால்கோள் விழா
தமிழக வணிகம் விடியல் மாநாடு பந்தல் கால்கோள் விழா மாநிலத் தலைவர் விக்ரம் விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்றது.விழாவில் மாநில தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது.... சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையான சமயபுரம் சுங்கசாவடி அருகில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த இடத்தில் வரும் 5-ஆம் தேதி மாநில மாநாடு நடைபெறுகிறது. 5 லட்சம் வியாபாரிகள் பங்கேற்கும் இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
மாநாடு நடைபெறும் மே 5ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கடைகளுக்கும் விடுமுறை அளித்து மாநாட்டில் பங்கேற்க இருக்கிறோம். வணிகர்களுக்கென பணிகள் மேம்பாட்டிற்காக உரிய ஆலோசனைகளை வழங்கிடும் வகையில் ஒரு உயர்மட்டக் குழு அமைத்திட வேண்டுகிறோம் .
வணிகர்களை அச்சுறுத்தி வரும் ஆன்லைன் வர்த்தகம் அமேசான் பிளிப்கார்ட் உள்ளிட்ட வர்த்தக நிலையம் ரிலையன்ஸ் போன்ற மால்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்தி பாரம்பரிய வணிக சங்கிலியைப் பாதுகாத்திட அரசுக்கு கோரிக்கை வைப்பது என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றவுள்ளோம் என கூறினார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO