வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்

வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்

திருச்சி திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று முதல் மூன்று நாட்கள் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனை இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஜமாபந்தி நிகழ்ச்சி தொடங்கி வைத்தார். மேலும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.

மேலும் பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக மன அளித்தினர். இதேபோல் கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட எழில் நகர் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு மாவட்ட ஆட்சியர் தங்கள் பகுதிக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை அமல்படுத்த நிலம் ஒதுக்கீடு செய்தும், நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று ஒரு தரப்பும், அந்தத் திட்டத்தை அப்பகுதியில் செயல்படுத்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வரும் மற்றொரு தரப்பும் இருப்பதால் அரசு அதிகாரிகள் நாங்கள் எதுவும் செய்ய இயலாமல் உள்ளோம். ஆகையால் உங்களுக்குள் பேசி ஒரு முடிவுக்கு கொண்டு வந்தால் விரைவில் நாங்கள் அந்த இடத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை கொண்டு வருவோம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

அதற்கு அப்பகுதி மக்கள், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை அமுல்படுத்திய பின்பு அதனை முறையாக பராமரிக்க மாட்டார்கள் என்பதை வலியுறுத்தி ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தன வருகின்றனர். அதனால்தான் இந்தத் திட்டத்திற்கு ஒரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு அரசு துறை சார்பில் பராமரிக்க பொறுப்பேற்குமாறு மனு அளிக்க வந்தவர்கள் ஆட்சியரிடம் தெரிவித்தனர்.

இதற்கு ஆட்சியர் கூறுகையில்..... எங்கள் தரப்பில் அதனை பராமரிப்பதற்கு உடனடியாக தற்பொழுது எனது கையொப்பமிட்ட சான்றை தருகிறேன் நீங்கள் திட்டத்தை எதிர்க்கும் நபர்களிடம் பேசி அந்த திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க முயற்சி செய்ய வேண்டும் என்று கூறினார். மேலும் அதற்கான கடிதத்தை தயார் செய்யுமாறு அதிகாரியிடம் வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து அனைத்து துறை சார்பிலும் ஜமாபந்தி நிகழ்ச்சியில் அலுவலர்கள் கலந்து கொள்ள வந்துள்ளார்களா என மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். 

அதில் திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ராஜா, மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து கருப்பன் ஆகிய இருவரும் ஜமாபந்தியில் கலந்து கொள்ளாதது தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் இருவரையும் தொடர்பு கொண்ட அதிகாரிகள உடனடியாக ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு வருமாறு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து கருப்பன் ஆகிய இருவரும் வந்தனர்.

அப்போது நிகழ்ச்சியில் பங்கேற்காது ஏன் என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் இருவரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு வேங்கூரில் 100 நாள் வேலை பணியாளர்களுக்கு நான்கு மாதமாக சம்பளம் வரவில்லை என்றும் அதற்காக இன்று விசாரணைக்கான சென்றதாகவும் தெரிவித்தனர். இதற்கு மாவட்ட ஆட்சியர் நான்கு மாதமாக நடைபெற்று வரும் பிரச்சனையை இன்று தான் போய் விசாரிக்க வேண்டுமா, இதற்கு முன்னரோ அல்லது நாளைக்கோ சென்று விசாரிக்கலாமே என்று அவர்களிடம் கடிந்து கொண்டார்.

மாவட்ட ஆட்சியர் கலந்து கொள்ளும் முக்கிய நிகழ்ச்சியான ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு அரசு அலுவலர்களாக இருவரும் பங்கேற்காதது குறித்து இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க தாசில்தாருக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை நடத்தினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision