திருச்சி சூரியூரியில் ஜல்லிக்கட்டு விழா- 600 காளைகளும் 400 காளையர்களும் பங்கேற்பு - 4 பேர் காயம்
400 மீட்டர் தூரத்திற்கு இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டு களத்திற்குள் 15 மீட்டர் வரை தேங்காய் நார்கள் கொட்டப்பட்டு உள்ளது. ஆயிரக்கணக்கானோர் ஜல்லிக்கட்டு காண வருவதால் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். களத்திற்குள் உள்ள இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகள் பகுதி முழுவதும் இரும்பு தடுப்புகளை கொண்டு பாதுகாப்பாக அமைத்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி என்பதால் இப்பகுதி கிராம மக்கள் காண மிகுந்த உற்சாகத்துடன் ஜல்லிக்கட்டை காண வர துவங்கி உள்ளனர். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு தங்க மோதிரம் இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் பரிசாக வழங்க விழா குழுவினர் செய்துள்ளனர். 600 காளைகளும், 400 காளையர்களும் ஜல்லிக்கட்டில் பங்கேற்க உள்ளனர்.
முன்னதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைத்தார். முதல் சுற்றி காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன. இதுவரை 4 காளையருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.