காரிய சித்தி தரும் ஆரிய பாப்பாத்தியம்மன் கோவில் திருவிழா- இரண்ய வதம் செய்யும் தத்ரூப நிகழச்சி

காரிய சித்தி தரும் ஆரிய பாப்பாத்தியம்மன் கோவில்  திருவிழா- இரண்ய வதம் செய்யும் தத்ரூப நிகழச்சி

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொன்முச்சந்தியில் காரியசித்தி தரும் ஆரிய பாப்பாத்தியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசித் திருவிழா இன்று தொடங்கியது. இதன் தொடக்கமாக மணப்பாறை காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னர் மல்லி, முல்லை, ரோஜா, அரளி என பலவிதமான

வண்ணமலர்களால் நிரப்பட்ட பூத்தட்டுகள் ஊர்வலமானது புறப்பட்டது. மின்னொளியில் இருந்த பூப்பல்லக்கில் அலங்கரிக்கப்பட்ட ஆரியபாப்பாத்தியம்மன் வைக்கப்பட்ட பின் கேரள செண்டை மேளம், கதக்கலி நடனம், விஷ்ணு நரசிம்ம அவதாரத்தில் இரணியனை வதம் செய்யும் நிகழ்ச்சி ஆகியவை முன் செல்ல பல்லக்கு பொன்முச்சந்தி நோக்கி

 சென்றது. வேப்பிலை மாரியம்மன் கோவிலில் அனுமதி பெற்ற பின் ஆரியபாப்பாத்தி அம்மன் ஆலயம் சென்றதை அடுத்து திருவிழா தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கேரளா கதகளி நடனம், சென்டை மேளம, நரசிம்ம அவதாரத்தில் இரணியனை வதம் செய்யும் தத்ரூப நிகழ்ச்சியை ஏராளமான மக்கள் கண்டு ரசித்ததோடு தங்களது செல்போனில் படமெடுத்துச் சென்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision