பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் கொரோனா பேரிடர் உதவி மையம் துவக்கம்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் கொரோனா பேரிடர் உதவி மையம் துவக்கம்.

திருச்சியில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். முறையான வழிகாட்டுதல் கிடைக்காமலும், போதிய உதவி இல்லாமலும், பொதுமக்களில் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பொதுமக்களின் தேவைகளை கருதி கொரோனா பேரிடர் உதவி மையத்தை (Covid Relief Centre) தமிழகத்தில் பல்வேறு  இடங்களில் துவங்கப்பட்டுள்ளது.


இதன் ஒரு பகுதியாக திருச்சி சுப்ரமணியபுரம், ஜெய்லானியா பள்ளிவாசல் எதிரில் இன்று (27-05-2021) காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை மற்றும் மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை இயங்கக்கூடிய கொரனோ பேரிடர் உதவி மையத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட தலைவர் சபியுல்லா அவர்கள் துவக்கி வைத்தார்.

மேலும் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனநல ஆலோசனைகள், மொபைல் ஆக்ஸிஜன் சேவை, மருத்துவமனை சம்பந்தபட்ட  வழிகாட்டல், ஆக்சிஜன் சிலிண்டர் ஏற்பாடு செய்து கொடுத்தல், ஆக்சிஜன் பிளஸ் பரிசோதனை செய்தல், கபசுரக் குடிநீர், ஹோமியோபதி மாத்திரைகள், வைட்டமின் மாத்திரைகள் வழங்குதல் போன்ற சேவைகள் இந்த மையத்தின் மூலம் வழங்கப்படுகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx