போலியான ஆவணங்கள் அல்லது இ-பதிவு சான்று பயன்படுத்தினால் கைது.

போலியான ஆவணங்கள் அல்லது இ-பதிவு சான்று பயன்படுத்தினால் கைது.

திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவுபடி, திருச்சி மாநகரில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன சோதனை மையம் அமைக்கப்பட்டு, இ-பதிவு பெற்று வரும் வாகனங்களை இ-பதிவின் உண்மை தன்மை அறிவதற்காக பிரத்தியேகமாக 50 கைப்பேசிகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் 
TN E-Pass (Mobile App) என்ற செயலியின் மூலம் வாகனங்களில் உள்ள  QR Code யை பரிசீலிக்கும் வண்ணம் தீவிர சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் காலாவதியான மற்றும் போலியான இ-பதிவு ஆவணங்களுடன் பயணம் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆவணங்கள் அல்லது இ-பதிவு சான்று ஆகியவற்றினை போலியாக தயாரித்து பயன்படுத்தினால் கைது செய்யப்பட்டு சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 10.05.2021-ஆம் தேதி முதல் திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட காவல் நிலைய பகுதிகளில் அரசின் தடை உத்தரவை மீறி இன்று வரை முகக்கவசம் அணியாத நபர்கள் மீதும், சமூக இடைவெளியினை கடைப்பிடிக்காத 8700-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இன்று வரை விதிமுறைகளை மீறி சுற்றித்திரிந்த சுமார் 2800-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேற்று விதிமுறைகளை மீறி சுற்றித்திரிந்த சுமார் 430-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அரசின் கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென திருச்சி மாநகர 
காவல் ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx