உலக இதய தினம் - திருச்சி காவல்துறையினருக்கு சிறப்பு மருத்துவ முகாம்!!
திருச்சி மாநகர காவல் துறையில் பணிபுரியும் 55 முதல் 65 வயது வரை உள்ள காவல் ஆளிநர்களுக்கு உலக இருதய தினத்தை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் இன்று கே.கே நகர் ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது.
திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் மருத்துவ முகாமினை துவக்கி வைத்து காவல் துறை ஆளிநர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்நிகழ்ச்சி திருச்சி மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு காவல்துறை ஆணையர் பவன் குமார் ரெட்டி மற்றும் திருச்சி மாநகர காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Advertisement
மேலும் இந்நிகழ்ச்சியில் டாக்டர் சுந்தர்ராஜன், டாக்டர் பிரசன்ன வெங்கடேஷ், கோகிலா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இதய நோய் குறித்த விழிப்புணர்வு, மருத்துவ குறிப்புகள் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கினர். இந்த முகாமில் 40 காவல் ஆளுநர்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை நடத்தி ஆலோசனைகள் வழங்கப்பட்டது.