கொரோனா காலகட்டத்திற்கு மத்தியிலும் 250 வேகன்களை உற்பத்தி செய்து அசத்திய திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை!!

கொரோனா காலகட்டத்திற்கு மத்தியிலும் 250 வேகன்களை உற்பத்தி செய்து அசத்திய திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை!!

இந்தியாவில் வேகன் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் நான்கு இரயில்வே பணிமனைகளில் பொன்மலையும் ஒன்றாகும். இதன் மூலம் இந்தியாவில் சரக்கு சேவை மேம்படுத்தப்பட்டு வருகிறது, கையாள் தற்பொழுது இங்கு தயாரிக்கப்படும் BOXNHL வகை வேகன்கள், சுரங்கத்தில் பொருட்களை பெறப்படும் நிலக்கரி மற்றும் பல்வேறு வகையில் பயன்படுத்தப்படுகிறது. கூடுதலாக BVCM வகை Guard Van-கள் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. 

Advertisement

கொரோனா ஊரடங்கு காரணமாக ஏப்ரல் 2020-ல் உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட்டன. பிறகு அறிவிக்கப்பட்ட தளர்வுகளால் மே-2020-ல் பணிகள் மீண்டும் நடைபெற்ற நிலையில், ஜூன் 2020-ல் முழு அளவிலான உற்பத்தி துவக்கப்பட்டது‌. நடப்பு நிதியாண்டில் ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகள், சவால்கள் மத்தியில் இரயில்வே வாரியத்தின் இருப்புப்பாதை இயங்கு வண்டிக்கான செயல்முறை திட்டத்தின் கீழ் பொன்மலை பணிமனை தனது 250-வது வேகனை இன்றுடன் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. 

இந்த உற்பத்தி தொகுப்பில் 188 உயர் கனரக சரக்கு வேகன்களும் (BOXNHL), 62 கார்டு வேகன்களும் (BVCM) அடக்கம். இன்று, பொன்மலை பணிமனை தனது வரலாற்றில் முதன்முறையாக 100 BVCM வேகன்கள் உற்பத்தி இலக்கை எட்டியுள்ளது. 100-வது BVCM வேகன் மற்றும் இந்த நிதியாண்டில் 250-வது இரயில்வே ஆர்டர் வேகன் கொடியசைத்து வழியனுப்புதல் நிகழ்வானது பொன்மலை இரயில்வே பணிமனையில் நடைபெற்றது.

Advertisement

இதில் முதன்மை பணிமனை மேலாளர் சியாமதர் ராம் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். மேலும் ஏ. கிளமெண்ட் பர்ணபாஸ், உதவி தலைமை இயந்திரவியல் பொறியாளர், ப்யூஸ் குமார், வேகன் உற்பத்தி பணி மேலாளர், அதிகாரிகள், மேற்பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO