பொன்மலை வார சந்தையில் பொதுமக்களை தத்ரூபமாக வரைந்து அசத்தும் ஓவியர்!!

பொன்மலை வார சந்தையில் பொதுமக்களை தத்ரூபமாக வரைந்து அசத்தும் ஓவியர்!!

"எங்க ஊரு மேகமெல்லாம் எப்பவாச்சும் மழை பெய்யும்...அப்ப நாங்க மின்னலுல போட்டோ புடிச்சோம்..தொப்புள்கொடியைப் போலத்தான் இந்த ஊரை உணர்ந்தோம்...வெயிலைத் தவிர வாழ்க்கையில வேற என்ன அறிஞ்சோம்...." என்ற பாடல் வரிகளுக்கு ஏற்றவாரே திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை என்றாலே களைகட்டி காணப்படும் ஒரு சந்தைதான் பொன்மலை வார சந்தை.

மற்ற சந்தைகளை விட பொன்மலை சந்தை எப்போதும் பிரசித்தி பெற்ற ஒன்றுதான். திருச்சி மட்டுமல்லாது பல மாவட்டங்களிலிருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்டம் குவிந்த வண்ணம் தான் இருப்பார்கள். பொன்மலை சந்தையில் பொருட்கள் வாங்குவதை விட அதனை வியந்து ரசித்து செல்பவர்கள் தான் இன்றளவும் அதிகமாக இருக்கின்றன. கடந்த 8 மாதங்களுக்கு பிறகு தொடங்கப்பட்ட பொன்மலை சந்தையில் வித்தியாசமான பறவைகள், அனைத்து வகையான கலர் மீன்கள்,காய்கறிகள், பிளாஸ்டிக் பொருட்கள், துணிமணிகள், வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களும் கிடைக்கிறது.

Advertisement

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொன்மலை சந்தையில் அதிகமான கூட்டத்திற்கும், வித்தியாசமான பொருள்களும் மத்தியில் ஒரு நபரை சுற்றி பல்வேறு மக்கள் குவிந்து வேடிக்கை பார்த்தனர். அங்கு இருந்தவர் ஒருவரை எதிரே அமர வைத்து தத்துரூபமாக வரைந்தது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. அவர் திருச்சி காட்டூர் பகுதியை சேர்ந்த ஓவியர் சித்தன் சிவா என்பது தெரியவந்ததது.இவர்தான் ஏற்கனவே திருச்சி மாநகராட்சி பற்றி கொரோனா காலகட்டத்தில் தத்ரூபமாக அப்படியே காட்சிகளை பதிவிட்டவர்.

இதுகுறித்து பொன்மலை சந்தையில் பொதுமக்களை தத்ரூபமாக வரைந்து வரும் சித்தன் சிவாவிடம் பேசினோம்.... "கடந்த 8 மாதங்களுக்கு மேலாக சரியாக வேலை இல்லாததால் சற்று சிரமமாகவும், தான் கற்று வந்த ஓவியக்கலையை நானே புதுப்பித்துக் கொள்வதற்காகவும் இந்த பொன்மலை ஞாயிற்றுக்கிழமை சந்தையில் பங்கு எடுத்து வருகிறேன். கடந்த மூன்று வாரங்களாக பொன்மலை சந்தைக்கு வந்து ஓவியங்கள் வரைந்து வருகிறேன். ஒருவரை தத்ரூபமாக வரைய வேண்டுமென்றால் ஓவியக்கலை மற்றும் ஆர்ட்டிஸ்டுகள் 1000 முதல் 2000 ரூபாய் பணம் வசூலிப்பார்கள். ஆனால் நான் பொன்மலை சந்தையில் 250 ரூபாய்க்கு ஒருவரை வரைந்து கொடுக்கிறேன்.

இது பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. சிறுவர்கள் வந்து அண்ணே என்னையும் வரைந்து கொடுங்கள் என கேட்கும் போது, சிறுவர்கள் ஒரு ரூபாய் முதற்கொண்டு என்னிடம் கொடுத்து செல்கின்றனர். ஒரு புதுவித அனுபவத்தை பொன்மலை சந்தையில் அனுபவித்து வருகிறேன். தொடர்ந்து இனி வரும் காலங்களில் பொன்மலை வார சந்தைகளில் ஓவியங்கள் வரைவேன்" என்றார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறியhttps://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a