திருச்சி பெண்ணுக்கு 4 பதக்கம் - உலக அளவிலான போட்டிக்கு தகுதி

திருச்சி பெண்ணுக்கு 4 பதக்கம் - உலக அளவிலான போட்டிக்கு தகுதி

மராட்டிய மாநிலம் புனேவில் கடந்த 13ம் தேதியிலிருந்து 17ம் தேதி வரை மூத்தோருக்கான தடகளப் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள எச்இபிஎப் தொழிற்சாலையை சேர்ந்த லோகேஷ் என்பவரின் மனைவி பிரியா 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், 400 மீட்டர் தொடர் ஓட்ட பந்தயம், 100 மீட்டர் தொடர் ஓட்டபந்தயம் மற்றும் நீளம் தாண்டுதல் ஆகியவற்றில் கலந்து கொண்டார். இதில் மூன்று தங்கப் பதக்கத்தையும், ஒரு வெண்கல பதக்கத்தையும் வென்றுள்ளார்.

மேலும் வருகிற ஆகஸ்ட் 13ம் தேதி சுவீடனில் நடக் கும் உலக அளவிலான மூத்தோருக்கான தடகள போட்டியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு பிரியாவுக்கு கிடைத்து உள்ளது.

வீராங்கனை பிரியா மூன்று தங்கம், ஒரு வெண்கல பதக்கம் பெற்று தமிழ்நாடு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வெல்வதற்கு வழி வகுத்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision