முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்தியேக பெட்ரோல் ஸ்கூட்டர் - ஆட்சியர் தகவல்

முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்தியேக பெட்ரோல் ஸ்கூட்டர் - ஆட்சியர் தகவல்

திருச்சி மாவட்டத்தில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் பெற்றிட விண்ணப்பிக்கலாம்‌ என மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தகவல் தெரிவித்துள்ளார்.

Advertisement

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட உள்ளது. இணைப்பு சக்கர ம்பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் பெற விரும்புவோர் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், இரண்டு கால்கள் பாதிக்கப்பட்டவராகவும், கைகளால் வாகனத்தின் கட்டுபாடுகளை நன்கு இயக்க முடிந்தவராகவும் இருக்க வேண்டும்.

Advertisement

மேலே குறிப்பிட்ட தகுதிகள் கொண்ட முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை (அனைத்து பக்கங்களும்), உணவுப் பொருள் வழங்கல் அட்டை (ரேஷன் கார்டு) ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவ அடையாள அட்டை (UDID Card) ஆகியவற்றின் நகல்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 ஆகியவற்றுடன் திருச்சிராப்பள்ளி கண்டோன்மெண்ட், மாவட்ட நீதிமன்ற வளாக பின்புறம் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் 04.01.2021-க்குள் நேரில் வந்து விண்ணப்பித்து பயனடையுமாறும், மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண்: 0431-2412590-ல் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.