ரோட்டரி சங்கங்கள் மற்றும் பிரண்ட்ஸ் ரத்த வங்கி இணைந்து நடத்திய இரத்த தானம் முகாம்

ரோட்டரி சங்கங்கள் மற்றும் பிரண்ட்ஸ் ரத்த வங்கி இணைந்து நடத்திய இரத்த தானம் முகாம்

"உதிரம் கொடுப்போம், உயிரைக் காப்போம்" ரத்த தானம் செய்வதால் ஒரே நேரத்தில் நாம் மூன்று உயிர்களை காக்க முடியும். 18 முதல் 65 வயதுக்கு உட்பட்ட யார் வேண்டுமானாலும் ரத்தத் தானம் செய்யலாம். கொரோனா காலகட்டத்தில் ரத்த தானம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்த நிலையில், 18 முதல் 45 வயது வரையிலான நபர்களுக்கு  தடுப்பூசி போடப்பட்டு வரும் சூழலில், ரத்த தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தகுதியும் விருப்பமும் உள்ள தன்னார்வலர்கள், தடுப்பூசி போட்டுக் கொள்ளும் முன்னர் அங்கீகரிக்கப்பட்ட ரத்த வங்கிகளில் ரத்த தானம் செய்ய வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது. பின்னர் தடுப்பு ஊசியை செலுத்தி கொண்டவர்களும் முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 14 நாட்களுக்கு பிறகு இரத்த தானம் செய்யலாம். 

அதனைப்போன்று இரண்டாவது  தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களும் 14 நாட்களுக்கு பிறகு ரத்த தானம் வழங்கலாம் என்றும் அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில், திருச்சி மெட்ரோ மற்றும் ஶ்ரீரங்கம் ரோட்டரி சங்கமும், ப்ரண்ட்ஸ் இரத்த வங்கியும் இணைந்து இரத்த தானம் முகாமை  ஏற்பாடு செய்திருந்தனர்.

இம்முகாம் குறித்து பிரண்ட்ஸ் ரத்த வங்கியின் உரிமையாளர் லட்சுமி நாராயணன் கூறுகையில்... ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மாதங்களில் ரோட்டரி சங்கங்கள் இணைந்து ரத்த தானம் முகாம்கள் நடத்துவது வழக்கமான ஒன்று தான். அதன் அடிப்படையிலேயே இவ்வாண்டு ரத்ததான முகாமானது இன்று ஸ்ரீரங்கத்தில் உள்ள ரோட்டரி ஹாலில் நடைபெற்றது.

இந்த ரத்த தானம் முகாமில்  ரோட்டரி சங்க தலைவர்கள் S.மணிகண்டசாமி, S.மைக்கேல் ஜுடி, செயலாளர்கள் Dr.K.செந்தில்குமார், A.செந்தில்குமார் 
உறுபினர்கள் ராஜா, பாபு, லட்சுமிநாராயணன், அசோக், கோகுல், அப்பர்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முகாமில் இருபதுக்கும் மேற்பட்ட  தன்னார்வலர்களும் கலந்து கொண்டு ரத்த தானம் செய்துள்ளனர். 

ரத்த தானம் செய்வதால் பலன் பெறுவது மற்றவர் மட்டுமல்ல நாமும் தான் உடலில் இயற்கையாக புதிய இரத்தம் உற்பத்தியாகும் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு சீராக இருக்க உதவும். மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறையும். உடலில் அதிக அளவில் உள்ள இரும்புச்சத்து சமன் செய்யப்படும். எனவே இரத்த தானம் செய்ய விரும்புபவர்கள் நம்மையும் காத்துக் கொண்டு பிறரையும் காக்கலாம் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I