சமயபுரம் உண்டியல் காணிக்கை திருட்டு - தங்கம் மீட்பு - 2 பேர் கைது

சமயபுரம்  உண்டியல் காணிக்கை திருட்டு - தங்கம் மீட்பு - 2 பேர் கைது

தமிழகத்தில் உள்ள சக்தி வழிபாட்டுத்தலங்களில் முதன்மையானது சமயபுரம் மாரியம்மன் கோயில். இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். அவ்வாறு செலுத்தப்படும் காணிக்கை மாதம் இரண்டு முறை எண்ணப்படும்.

கோயில் இணை ஆணையர் தலைமையில் கோயில் அலுவலர்கள், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவ - மாணவிகள் பங்கேற்று உண்டியல் காணிக்கையை எண்ணுவது வழக்கம். அந்த வகையில் நேற்று சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை கணக்கிடப்பட்டது.

இதில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சிலர் ஒரு தன்னார்வ சங்கத்தின் மூலமாக காணிக்கை எண்ணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவர்களில் அஜய், ஜெய்குமார் ஆகிய இருவரும் அடிக்கடி கழிவறை சென்று வருவதாக கூறிவிட்டு சென்றனர். இதனால் சந்தேகம் அடைந்து அவர்களை சோதனையிட்டனர்.

அப்போது அவர்கள் இருவரும் 46 கிராம் தங்கத்தை திருடி மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இருவரும் சமயபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இதுகுறித்து சமயபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn