சித்திரை பௌர்ணமி தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு இரயில்இயக்கிட கோரிக்கை- திருச்சி எம் பி

சித்திரை பௌர்ணமி தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு இரயில்இயக்கிட கோரிக்கை- திருச்சி எம் பி

எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதி, திருச்சி மாநகரில் இருந்து சித்திரை பௌர்ணமி தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு இரயில் இயக்கிட வேண்டி கோரிக்கை.எதிர்வரும் மே 12ஆம் தேதி அருள் மிகுந்த சித்திரை பௌர்ணமி தினத்தை முன்னிட்டு கிரிவலம் செல்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வழிபடுவர். 

திருச்சியில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம். இந்நிலையில், மே 12ஆம் தேதி திங்கள் கிழமை, திருச்சியிலிருந்து ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம் வழியாக திருவண்ணாமலை அல்லது வேலூருக்கு

சிறப்பு இரயில் இயக்கித் தர வேண்டி தென்னக இரயில்வே பொது மேலாளருக்கு கோரிக்கை கடிதம் எழுதியுள்ளேன். மேலும் திருச்சி கோட்ட இரயில்வே மேலாளருக்கும் கோரிக்கைக் கடிதத்தில் நகல் இணைத்துள்ளேன். விரைவில் இதற்கான அறிவிப்பு வருமென்று எதிர்ப்பார்க்கிறேன். என்று துரை வைகோ அவர்கள் கூறினார் 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision