திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழக முதல்வர் கலந்து கொள்ள உள்ள நிகழ்ச்சி நிரல்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழக முதல்வர் கலந்து கொள்ள உள்ள நிகழ்ச்சி நிரல்

தமிழத்தின் மிகப்பெரிய, முழுமையாக ஏசி வசதி செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை திருச்சியில், நாளை தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அதற்காக, சென்னையில் இருந்து விமானம் மூலம், முதல்வர் ஸ்டாலின், இன்று திருச்சி வந்தடைந்தார்.

திருச்சி– மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சப்பூரில் 115.68 ஏக்கரில், ஏசி வசதியுடன் கூடிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், சரக்கு வாகன முனையம், ஆம்னி பஸ் ஸ்டாண்ட், தீயணைப்பு நிலையம், காவல் நிலையம்  உள்ளிட்டவை 900 கோடியில் கட்டப்படுகின்றன.இதில், கட்டி முடிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், கனரக சரக்கு வாகன முனையம் ஆகியவற்றை, தமிழக முதல்வர் ஸ்டாலின், மே 9ம் தேதி (நாளை) திறந்து வைக்கிறார்.

திறப்பு விழாவுக்காக, பேருந்து நிலையம்அருகே 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.முதல்வர் வருகை: விழாவில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் திருச்சிக்கு, இன்று (8ம் தேதி) காலை 8:00 மணிக்கு வருகிறார். காலை 12:30 மணிக்கு திருவெறும்பூரில் நடைபெறும் அரசு மாதிரிப் பள்ளி திறப்பு விழாவில் பங்கேற்கிறார். திரு­வெ­றும்­பூரில் சுமார் 19.23 கோடி செலவில் அமைந்துள்ளஅரசு மாதி­ரிப் பள்ளி வளா­கத்­தினைதிறந்து வைக்கிறார்.

அங்கிருந்து அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று, அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். மாலை 5:00 மணிக்கு கலைஞர் அறிவாலயம் சென்று, கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார். நிகழ்ச்சிகளை முடித்து, இரவு அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுக்கிறார்.

நாளை (9ம் தேதி) காலை 9:00 மணிக்கு, பஞ்சப்பூரில் புதிய ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்டுக்கு அருகே பெரியார் சிலை, கருணாநிதி சிலை ஆகியவற்றை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். தொடர்ந்து, 129 கோடியில் கட்டப்பட்டுள்ள கனரக சரக்கு வாகன முனையம், 408 கோடியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் ஆகியவற்றை திறந்து வைக்கிறார். புதிய பஸ் ஸ்டாண்ட் முதல் தளத்தில் டவுன் பஸ்கள் இயக்கத்தைத் தொடங்கி வைக்கிறார்.

மேலும், 236 கோடியிலான ஒருங்கிணைந்த காய்கனி, மலர்கள் மார்க்கெட்டுக்கு அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து நடைபெறும் அரசு விழாவில், 50 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குகிறார்.விழா முடிந்து அரசு விருந்தினர் மாளிகை செல்லும் முதல்வர் மாலை 5:00 மணிக்கு எம்.ஐ.இ.டி., கல்லூரியில் நடைபெறும் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாட்டில் பங்கேற்கிறார். அன்று இரவு விமானம் மூலம், முதல்வர் சென்னை செல்கிறார்.

ட்ரோன்கள் பறக்கத் தடை: பாதுகாப்புக் காரணங்களுக்காக திருச்சி மாவட்டத்தில் முதல்வர் பயணம் செய்யும் சாலைகள் மற்றும் விமான நிலைய சுற்றுப் பகுதிகளில் 8 ம் தேதி முதல் 9ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் எச்சரித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision