பெண்ணிடம் போனில் வசைபாடிய எஸ்.எஸ்.ஐயை மைக்கில் வறுத்தெடுத்த டிஐஜி வருண்குமார்

பெண்ணிடம் போனில் வசைபாடிய எஸ்.எஸ்.ஐயை மைக்கில் வறுத்தெடுத்த டிஐஜி வருண்குமார்

பெண்ணிடம் போனில் வசைபாடிய எஸ்.எஸ்.ஐயை மைக்கில் வறுத்தெடுத்த டிஐஜி வருண்குமார்

அரியலூர் மாவட்டம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் எஸ் எஸ் ஐ ஆக பணிபுரிந்த சுமதி என்பவர், கற்பழிப்பு தொடர்பாக புகார் கொடுக்க முயன்ற பெண்ணிடம், தகாத வார்த்தைகளில் பேசி புகாரை வாங்காமல் தவிர்த்து உள்ளார்.இந்த சம்பவம் டிஐஜி வருண்குமார் கவனத்திற்கு

வந்ததை தொடர்ந்து, அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு மைக் மூலம் தொடர்பு கொண்ட டிஐஜி வருண்குமார், அங்கிருந்த இன்ஸ்பெக்டர் இடம் விசாரணை நடத்தினார். அப்போது மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர், எஸ் எஸ் ஐ சுமதிக்கு ஆதரவாக பேசினார். அப்போது எஸ்எஸ்ஐ பேசியதை தவறு என்று சொல்லாமல், அவர் தெரியாமல் பேசி விட்டார் என்று இன்ஸ்பெக்டர் கூறியதால், கடுப்பான

டிஐஜி வருண்குமார், இதில் முதல் குற்றவாளி நீங்கதான். அவர் பேசியதை தவறு என்று சொல்லாமல் தெரியாமல் செய்துவிட்டார் என்கிறீர்கள். வெட்கமாக இல்லை உங்களுக்கு இன்ஸ்பெக்டர் என்று சொல்லிக் கொள்ள தெரியாமல் பேசி விட்டார்கள் என்று சொல்லலாமா? என்று கடிந்து கொண்டார்.அவர் அமைதியாக இருந்தவர்களுடன் மைக்கில் பதில் சொல்கிறீர்களா நேரில் வந்து நிற்கவைக்க வா என்றார்.

டிஐஜி கடுமையாக பேசியதும் தப்புதான் சார் வான் பண்ணி விடுகிறேன் என்று இன்ஸ்பெக்டர் கூறினார்.தொடர்ந்து பேசிய டிஐஜி , உடனடியாக அந்த அம்மாவை ரேஞ்ச் ஆபீசுக்கு வரச் சொல்லி புகார்களை வாங்க சொல்லுங்கள் எந்த டூட்டியில் இருந்தாலும் அவரை துரத்தி விடுங்கள். அதற்கான உத்தரவை அனுப்பி வைக்கிறேன் என்று கூறினார்.

 டிஐஜி வருண்குமார் மைக் மூலமாக அரியலூர் மாவட்ட அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனை தொடர்பு கொண்டு கடுமையாக உத்தரவிட்ட ஆடியோ வைரலாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய ராஜேஸ்வரி பற்றி விசாரித்த பொழுது அவர் இரண்டாவதாக திருமணமானவருடன் உறவிலிருந்து குழந்தை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சம்பவத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது போகப் போக தெரியும். தற்போது எஸ்எஸ்ஐயை திருச்சி சரக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து டிஐஜி வருண்குமார் உத்தரவிட்டுள்ளார்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision