23-ந்தேதி திருச்சி மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்

23-ந்தேதி திருச்சி மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்

திருச்சி மாவட்டத்தில் பின்வரும் கால அட்டவணையின்படி மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களில் இருந்து 10 உறுப்பினர்களும், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்களிலிருந்து 8 உறுப்பினர்களும், மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். வேட்பு மனுக்கள் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் தேர்தல் நடத்தும் அலுவலர்களால் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களால் பெற்று கொள்ளப்படும்.

மேலும் வேட்பு மனு பரிசீலனை, வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை கீழ் குறிப்பிட்ட அட்டவணைப்படி நடைபெறும். தேர்தல் கால அட்டவணை விவரம் வருமாறு:- தேர்தல் அறிவிக்கை வெளியிடுதல் மற்றும் நேற்று இருந்து தொடங்கிய வேட்பு மனு தாக்கல் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் வருகிற 10-ந்தேதி ஆகும். வேட்புமனு பரிசீலனை 12-ந்தேதி காலை 11 மணியிலும், வேட்புமனு திரும்ப பெறுதல் 14-ந்தேதி மாலை 3 மணி வரை. 23-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை தொடக்கம். வாக்குப்பதிவு முடிவுற்றவுடன், 24-ந்தேதி தேர்தல் முடிவுக்கு வரும். 28-ந்தேதி முதல் கூட்டம் நடைபெறும். வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn