"பொன்னி இலக்கியத்திருவிழா’’ - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

"பொன்னி இலக்கியத்திருவிழா’’ - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

பொன்னி இலக்கியத் திருவிழாவை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், மாணவிகளிடையே புத்தக வாசிப்பும் உள்வாங்கும் திறனும் மற்றும் வினாடி–வினா போட்டி (16.02.2024) அன்று காலை 10:00 மணிக்கு திருச்சிராப்பள்ளி, தெப்பக்குளம், பிஷப்ஹீபர் மேனிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் ஒரு பள்ளிக்கு இரண்டு மாணவர்கள் மட்டுமே கலந்துகொள்ளலாம். இப்போட்டியில்வெற்றி பெறுபவர்களுக்கு முதல்பரிசு ரூ.10,000/-, இரண்டாம் பரிசு ரூ.5000/-, மூன்றாம் பரிசு ரூ.3000/- வீதம் வழங்கப்படும்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடையே படம் பார்த்து கவிதை எழுதும் போட்டி மற்றும் படம் பார்த்து கட்டுரை எழுதும் போட்டி மாவட்ட மைய நூலகக் கட்டிட வளாகத்தில் (16.02.2024) ஆம் நாளன்று காலை 10:00 மணிக்கு நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அல்லாது பொறியியல் கல்லூரிகள், பல்தொழில்நுட்பக்கல்லூரிகள், வேளாண்மைக் கல்லூரிகள், மருத்துவக்கல்லூரிகள், சட்டக்கல்லூரி முதலியவற்றில் பயிலும் கல்லூரி மாணவர்களும் கலந்து கொள்ளலாம்.

மேலும் இப்போட்டிகளில் ஒவ்வொரு கல்லூரியில் இருந்தும் ஒரு போட்டிக்கு இரண்டு மாணவர்கள் வீதம் கலந்துகொள்ளலாம். கவிதை மற்றும் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ஒவ்வொருப் பிரிவிலும் முதல் பரிசு ரூ.15,000/-, இரண்டாம் பரிசு ரூ.10,000/-, மூன்றாம் பரிசு ரூ.5000/- என்ற வகையில் பரிசுகள் வழங்கப்படும்.

மேலும் திருச்சிராப்பள்ளி மாவட்டப் பொதுமக்களுக்கு (பள்ளி, கல்லூரி மாணவர்கள் தவிர்த்து) சிறுகதை எழுதும் போட்டி (16.02.2024)ஆம் நாளன்று காலை 10:00மணிக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகக் கட்டிட வளாகத்தில் நடைபெறவுள்ளது. சிறுகதை எழுதும் போட்டிக்கு பள்ளி-கல்லூரி மாணவர்கள் தவிர்த்து பொது மக்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.10,000/-, இரண்டாம் பரிசு ரூ.5,000/-, மூன்றாம் பரிசு ரூ.3000/- என்ற வகையில் பரிசுகள் வழங்கப்படும்.

மேற்காணும் போட்டிகளில் வெற்றிபெறும் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு (23.02.2024) அன்று காலை 10:00 மணிக்கு திருச்சிராப்பள்ளி கலையரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் பொன்னி இலக்கியத் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்படும் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision