சமயபுரம் கோவில் உண்டியல் காணிக்கை விவரம்

சமயபுரம் கோவில் உண்டியல் காணிக்கை விவரம்

சக்தி தலங்களில் முதன்மையானதும் பிரசித்தி பெற்ற தலமான சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகத்திலிருந்து மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாட்டிலிருந்தும் வந்து பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை காணிக்கையை உண்டியலில் செலுத்தி விட்டு செல்வார்கள்.

கடந்த 15 நாட்களாக காணிக்கை உண்டியலில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் வி எஸ் பி இளங்கோவன் தலைமையில் அறங்காவலர் உறுப்பினர்கள், கோவில் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் முன்னிலையில் எண்ணப்பட்டது.

இதில் ரொக்கமாக ரூபாய்1,06,78,777  பணமும் ஒரு கிலோ 290 கிராம் தங்கமும், 3 கிலோ 960 கிராம் வெள்ளியும், 165 அயல்நாட்டு ரூபாய் நோட்டுகளும், 1185 அயல்நாட்டு நாணயங்களும்,காணிக்கையாக பெறப்பட்டது.

உண்டியல் திறப்பில் கலந்து கொண்டவர்கள் விவரம் :

 அ .பிரகாஷ் இணை ஆணையர் 

 பெ.பிச்சைமணி அறங்காவலர் குழு உறுப்பினர் 

 இராஜ.சுகந்தி அறங்காவலர் குழு உறுப்பினர் 

 சே.லட்சுமணன் அறங்காவலர் குழு உறுப்பினர் 

 என் சரவணன் உதவியானவர் ஆணையர் இந்து சமய அறநிலைத்துறை 

 நா.சீனிவாசன் ஆய்வாளர் திருக்கோவில் பணியாளர்கள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision