சுமைதூக்கும் தொழிலாளியிடம் பணம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்து சென்ற நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.
கடந்த (21.07.2023)-ந் தேதி பார்சல் சர்வீஸில் லோடு மேனாக வேலை செய்பவர் திருவானைக்கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு, ஸ்ரீரங்கம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கன்னிமார்தோப்பு வழியாக காலை 07;00 மணிக்கு வீட்டிற்கு திரும்பும்போது, அங்கு நின்றிந்த ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி பணம் ரூ.1000 மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்து கொண்டு தப்பித்துசென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில், வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் விசாரணை செய்ததில், எதிரி முருகானந்தம் (24) என்பவர் கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் விசாரணையில் எதிரி முருகானந்தம் மீது ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் இருசக்கர வாகனம் திருடியதாக 1 வழக்கு, கொய்யாப்பழம் வியாபாரியிடம் கத்தியை காட்டி பணம் பறித்ததாக 1 வழக்கு, முன்விரோதம் காரணமாக ஆட்டோவை அடித்து நெருக்கியதாக 1 வழக்கு, முன்விரோதம் காரணமாக ஒருவரின் வீட்டினை பெட்ரோல் ஊற்றி எரித்ததாக 1 வழக்கு மற்றும் பீடி கேட்டு தகராறு செய்து அரிவாளால் வெட்டியதாக 1 வழக்கு என மொத்தம் 5 வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
எனவே எதிரி முருகானந்தம் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுபவர் என்பதாலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர் என விசாரணையில் தெரியவருதால், எதிரியின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரியின் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision