குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் சார்பில் நிலவேம்பு கசாயம்

குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் சார்பில் நிலவேம்பு கசாயம்

தற்போது ஏற்பட்டுள்ள பருவ கால மாற்றத்தால் ஏற்படும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. மேலும் டெங்கு காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் திருச்சி மாநகரில் டெங்கு காய்ச்சலால் சிறியவர்கள் முதல் பெரியோர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாநகரம் முழுவதும் அதிகமாக காய்ச்சல் பரவி வரும் சூழ்நிலையில் நீதிமன்ற வளாகத்திற்கு வந்த வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை மாவட்ட தலைமை நீதிபதி பாபு மற்றும் குற்றவியல் தலைமை நீதிபதி மீனா சந்திரா ஆகியோர் வழங்கினார்.

குற்றவியல் நீதிமன்றம் வழக்கறிஞர் சங்கம் மற்றும் ஆயுசு நூறு சித்தா மருந்தகம் இணைந்து நிலவேம்பு கசாயத்தை வழங்கினர். மேலும் நீதிபதிகள் கூறுகையில்.... தற்போது டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வரும் சூழ்நிலையில் நம் அனைவரும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆகையினால் தொடர்ந்து நீதிமன்றத்தில் நிலவேம்பு கசாயம் வழங்கப்படும் என தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் குற்றவியல் நீதிமன்றம் வழக்கறிஞர் தலைவர் சுரேஷ் மற்றும் செயலாளர் வெங்கட், மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் சசிகுமார், விஜய் நாகராஜன், கிஸோர் குமார், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் அனைத்தும் குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V.வெங்கட் ஏற்பாடு செய்திருந்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision