விதைப்பண்ணைகளை விதைச் சான்று உதவி இயக்குநர் ஆய்வு

விதைப்பண்ணைகளை விதைச் சான்று உதவி இயக்குநர் ஆய்வு

வையம்பட்டி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தின் மூலம் அமைக்கப்பட்டிருந்த வம்பன் 3 ரக தட்டைப் பயிர், கதிரி 1812  மற்றும் GJG 9  ரக நிலக்கடலை &  வம்பன் 8 மற்றும் வம்பன் 10 ரக உளுந்து விதைப் பண்ணைகளை திருச்சி மாவட்ட விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்றளிப்புத்துறை உதவி இயக்குநர் நளினி ஆய்வு பணி மேற்கொண்டார்.

ஆய்வு பணியின் போது உளுந்து பயிரில் அதிக மகசூல் பெறுவதற்க்கு DAP 2 %  கரைசலை 35 வது மற்றும் 45 வது நாளில் இலைவழியாக மாலை நேரத்தில் தெளிப்பதன் அவசியத்தையும், மேலும் நிலக்கடலை பயிரில்  நல்ல திறட்சியான பொக்கில்லாத காய்கள் பெற 45 வது நாள் மண்ணை கொத்தி ஜிப்சம்  160 kg ஒரு ஏக்கர்க்கு இட்டு மண் அணைப்பதன் முக்கியத்துவத்தையும், 

வேளாண்மை பல்கலை கழகத்தின் நிலக்கடலை ரிச், ஏக்கருக்கு  2 கிலோ வீதம் 35 வது மற்றும் 45 வது நாள் தெளிப்பதன்  அவசியத்தையும் விளக்கி கூறினார்,  ஆய்வின் போது வையம்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் முத்துசாமி, விதைச் சான்று அலுவலர் முருகவேல், உதவி விதை அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்..

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision