திருச்சியில் மேஜர் சரவணன் மெமோரியல் டிரஸ்ட் சார்பில் 52 அடி உயர தேசியக்கொடி

திருச்சியில் மேஜர் சரவணன் மெமோரியல் டிரஸ்ட் சார்பில் 52 அடி உயர தேசியக்கொடி

திருச்சி வெஸ்ட்ரி பள்ளி அருகே உள்ள மேஜர் சரவணன் நினைவு இடத்தில் 52 அடி உயர தேசியக்கொடி பறக்க விடப்பட்டது. கடந்த 1999 ஆம் ஆண்டு கார்கில் வெற்றியின் 25 வது ஆண்டு விழாவை நினைவுகூரும் வகையில், போரில் உயிர் தியாகம் செய்த "படாலிக் மாவீரன்"

மேஜர் சரவணனின் நினைவாக 24 மணி நேரம் பறக்கக்கூடிய 52 அடி உயர தேசிய கொடி கம்பம் தமிழக அரசின் அனுமதியுடன் மேஜர் சரவணன் நினைவு அறக்கட்டளை மூலம் மேஜர் சரவணன் மெமோரியல் டிரஸ்ட், மேஜர் ஜெனரல் இந்திரபாலன் (ஓய்வு) முன்னாள் தலைமைத் தளபதி தக்ஷின் பாரத் உடன் இணைந்து மேஜர் சரவணனின் 52வது பிறந்தநாளையொட்டி இன்று கொடியேற்றும் விழா நடைபெற்றது. 

இந்நிகழ்வில் ஆயுதப்படையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு , இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜாலட்சுமி, என்சிசி அதிகாரிகள் மற்றும் பிற மத்திய, மாநில அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். இந்தியாவிலேயே முதன்முறையாக பொது இடத்தில் 52 அடி உயரத்தில் பறக்க கூடிய தேசியக்கொடி இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision