திருவானைக்காவல் கொள்ளிடக்கரையில் உள்ள மணல் குவாரியை பொதுமக்கள் முற்றுகை

திருவானைக்காவல் கொள்ளிடக்கரையில் உள்ள மணல் குவாரியை பொதுமக்கள் முற்றுகை

திருவானைக்காவல் கொள்ளிடக்கரையில் உள்ள மணல் குவாரிக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கினர். மணல் அளவுக்கு அதிகமாக அள்ளப்படுவதாகவும் இதனால் நிலத்தடி நீர் குறைகிறது .மேலும் கனரக வாகனங்களால் சாலை பழுதாகி அப்பகுதியில் வசிக்கும் மக்கள் இருசக்கர வாகனங்களில் செல்லும் பொழுது விபத்து ஏற்படுகிறது என பொதுமக்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.

இப்போராட்டத்தினால் 500க்கும் மேற்பட்ட லாரிகள் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டன.

 திருச்சி திருவானைக்காவல் கொள்ளிடக்கரையில் செயல்படும் மணல் குவாரிக்கு செல்லும் லாரிகளால் சேதமடைந்த சாலைகளை, மாவட்ட நிர்வாகம் சரிசெய்து தராததால் அப்பகுதி மக்கள் தாங்களே சாலையை சீரமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறை வருவாய் துறை அதிகாரிகள் வந்து சமாதானப்படுத்தி பொதுமக்களை கலைந்து செல்ல வலியுறுத்தினர். வட்டாட்சியர் நான்கு நாட்களில் பொதுமக்கள் அதிகாரிகளுடன் கூட்டம் போட்டு முடிவெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision