திருச்சியில் ராணுவ தளவாட கண்காட்சி துவக்கம்

திருச்சியில் ராணுவ தளவாட கண்காட்சி துவக்கம்

திருச்சி திருவெறும்பூரை அடுத்த நவல்பட்டில் உள்ள மத்திய அரசின் பாதுகாப்புதுறை -நிறுவனமான HEPF (உயர் ஆற்றல் திட்ட தொழிற்சாலையில் தற்சார்பு இந்தியாவை கொண்டாடும் விதமாக தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் பல்வேறு எதிரி பீரங்கி எதிரப்பு வெடிமருந்துகள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு கடற்படை ராக்கெட்டு உள்ளிட்ட ராணுவ தளவாட கருவிகள் கண்காட்சியினை பொது மேலாளர் கியானேஷ்வர் தியாகி திறந்து வைத்தார்.

பின்னர் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் ராணுவ தளவாட கருவிகளை பார்வையிட்டார். இதனை தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கண்காட்சியினை பார்வையிட்டு கருவிகளின் உற்பத்தி மற்றும் பயன்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர்.

பின்னர் பொது மேலாளார் கியானேஸ்வர் தியாகி செய்தியாளர்களிடம் கூறுகையில்...... 76 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தற்சார்பு இந்தியாவை பறைசாற்றும் கூடிய வகையில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்தி பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பல்வேறு எதிரி பீரங்கி எதிரப்பு வெடிமருந்துகள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு கடற்படை ராக்கெட்டுகள் அடங்கிய கண்காட்சி இன்று துவங்கப்பட்டுள்ளது.

இந்த தொழிற்சாலை வளாகத்தில் புதியதாக ஒரு யூனிட் தொடங்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அது பரிசோதனை அடிப்படையிலேயே செயல்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் பரிசோதனை நிறைவுற்ற பின் அதற்குரிய ஆட்களை தேர்வு செய்து பணியில் அமர்த்தி தொடர்ந்து அந்த யூனிட்டில் உற்பத்தி துவங்கப்படும் என்றார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision