திருச்சியில் இந்திய மாணவர் சங்கத்தின் கல்லூரி கிளை மாநாடு.

திருச்சியில் இந்திய மாணவர் சங்கத்தின் கல்லூரி கிளை மாநாடு.

திருச்சி மாவட்டம் திருவரம்பூர் அருகே உள்ள துவாக்குடி அரசு கலைக் கல்லூரியின் இந்திய மாணவர் சங்கத்தின் கிளை மாநாடு திருவரம்பூர் கணேசா ரவுண்டானம் அருகில் உள்ள CITU அலுவலகத்தில் மாநாடு நடைபெற்றது. துவாக்குடி அரசு கலைக்கல்லூரியின் கிளை மாநாட்டை அந்த கிளையின் தலைவர் தோழர் அபிநயா தலைமை வகித்தார். இந்திய சுதந்திரப் போராட்ட தியாகி மறைந்த தோழர் சங்கர் அய்யா அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

பிறகு கிளையின் துணைத் தலைவர் தோழர் அபி வரவேற்பு ஆற்றினார். இந்திய மாணவர் சங்கத்தின் திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் தோழர் வைரவளவன் மாநாட்டின் துவக்க உரையாற்றினார். இந்திய மாணவர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் தோழர் ஜி.கே மோகன் சிறப்புரையாற்றினார். பிறகு இந்திய மாணவர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் தோழர் சூர்யா வாழ்த்துரை வழங்கினார் மற்றும் இந்தியா ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தோழர் பாலகுமார் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார். பிறகு இந்திய மாணவர் சங்கத்தின் திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் தோழர் ஆமோஸ் நிறைவுரையாற்றி சிறப்பித்தார்.

மாநாட்டில் புதிய நிர்வாகிகள் கிளையின் தலைவராக தோழர் அபிநயா துணைத்தலைவர்கள் ஆதி, மாதவன், ரஞ்சித் செயலாளராக தோழர் கௌதம் துணைச் செயலாளராக ராஜேஷ், துளசிநாதன், தனுஷ் செயற்குழு உறுப்பினர்கள் கஜேந்திரன், வினோதா, கவியா, ஆர்த்தி, கோகுல்நாதன், வேல் முருகன், மனோஜ், பிரகாஷ் உள்ளிட்ட தோழர்கள் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். பிறகு துவாக்குடி அரசு கலைக்கல்லூரி கிளை மாநாட்டின் தீர்மானங்கள் பேருந்து கூடுதலாக இயக்கவும், குடிநீர் வசதியை மேம்படுத்திதரவும்,

கல்லூரிக்குள் செயல்பட்டுக் கொண்டிருந்த மாணவியர் விடுதியினை சீரமைத்து மீண்டும் மகளிர் விடுதிணை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கல்லூரிக்குள் இருக்கக்கூடிய சிற்றுண்டியில் தரமான உணவுகள் ஏற்படுத்தி தருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவோம் எனவும், கல்லூரிக்குள் இருக்கக்கூடிய கருவேலி மரங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கும் கல்லூரி எதிரில் இயங்கிக் கொண்டிருக்கின்ற அரசு மதுபான கடையை விரைவில் இடம் மாற்றுவதற்கும் அரசு கலைக் கல்லூரியில் படிக்கக் கூடிய மாணவர்களுக்கு அனைவருக்கும் உதவித்தொகை சரியாக வழங்க வேண்டும் எனவும்,

துவாக்குடி அரசு கலைக்கல்லூரி பேருந்து நிறுத்தத்தை விரிவு செய்து தருவதற்கான முயற்சி ஏற்படுத்துவோம் எனவும், இந்த மாநாடு தீர்மானங்களை முன்னிறுத்தி நிறைவடைந்தது. இந்த மாநாட்டின் நிறைவாக தோழர் ராஜேஷ் நன்றியுரை ஆற்றினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision