திருச்சி மாவட்டத்தில் 272 மயில்கள் இறந்தது எப்படி ?
இந்தியாவின் தேசிய பறவை மயில். இவை பெரும்பாலும் காடுகளில் அதிக அளவில் வசித்து வரும் நிலையில், வேட்டையாடப்படுவது சாலை மற்றும் ரயில்களில் அடிபட்டு இறப்பது, விவசாயிகளால் விஷம் வைத்துக் கொள்வதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக மயில்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வடுகபட்டி என்ற இடத்தில் ஒரு தோப்பில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு 9 மைல்கள் கொத்துக்கொத்தாக இறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தேசியப் பறவையான மயில்கள் கொன்றது யார் என்பது பற்றி தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மணப்பாறை பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 12 மைல்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. மயில்கள் பயிர்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் மயில்களை விஷம் வைத்துக் கொள்வது அதிகரித்து வருகிறது. இப்படி செய்வது தண்டனைக்குரிய குற்றம் எனவே விவசாயிகள் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.
திருச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 272 மயில்கள் இறந்து உள்ளன. இவை எப்படி என்பது குறித்து மாவட்ட வன அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu