7 பவுன் தங்கதாலி செயினை பறித்த மற்றும் கஞ்சாவை விற்பனை செய்த நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

7 பவுன் தங்கதாலி செயினை பறித்த மற்றும் கஞ்சாவை விற்பனை செய்த நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

கடந்த (24.07.23)-ம்தேதி, கோட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை, காவேரி பாலம் அருகில் இரவு 10:30மணியளவில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த பெண் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்கதாலி செயினை இருசக்கர வாகனத்தில் வந்த நபர் பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணையில், பாலக்கரை முதலியார்சத்திரத்தை சேர்ந்த நித்தின் (22) த.பெ.நந்தகுமார் என்பவரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கடந்த (31.08.2023)-ந் தேதி ஏர்போர்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வயர்லெஸ்ரோடு பொதுகழிப்பிடம் அருகில் இளைய சமூகத்தை சீரழிக்கும் தடை செய்யப்பட்ட கஞ்சாவை இருசக்கர வாகனத்தில், கைப்பையில் வைத்து இளைஞர்களுக்கு விற்பனை செய்த ஏர்போர்ட் காமராஜ் நகரை சேர்ந்த மணி (எ) மணிகண்டன் (25) த.பெ.பழனி என்பவரை கைது செய்து, எதிரியிடமிருந்து சுமார் 1கிலோ 250கிராம் கஞ்சா, கஞ்சா விற்பனை செய்த பணம் ரூ.200/- மற்றும் இருசக்கர வாகனம் ஒன்றையும் கைப்பற்றி, எதிரி மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நித்தின் மீது கோட்டை காவல் நிலைய எல்லையில் வழக்கறிஞர், தனியார் மருத்துவமனை செவிலியர், கல்லூரி மாணவர்கள் ஆகியோர்களிடம் செல்போன் பறித்ததாக 4 வழக்குகளும், கண்டோண்மென்ட் காவல் நிலைய எல்லையில் கல்லூரி மாணவர், சூப்பர்வைசர் போன்றவர்களிடம் செல்போன் பறித்ததாக 2 வழக்குகளும், காந்திமார்க்கெட் காவல் நிலைய எல்லையில் செல்போன் பறித்ததாக ஒரு வழக்கு, இருசக்கர வாகனம் திருடியதாக ஒரு வழக்கும், கே.கே.நகர் காவல் நிலையத்தில் நடந்து சென்ற கல்லூரி மாணவரிடம் செல்போன் பறித்ததாக ஒரு வழக்கு உட்பட 10 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

மேலும் எதிரி மணி (எ) மணிகண்டன் மீது ஏர்போர்ட் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக 2 வழக்குகளும், கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக 1 வழக்கும், பூட்டி இருந்த தனியார் அலுவலகத்தை உடைந்து பணத்தை திருடியதாக 1 வழக்கும் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக 4 வழக்குகள் உட்பட மொத்தம் 9 வழக்குகள் ஏர்போர்ட் காவல் நிலையத்தில் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

எனவே, எதிரிகள் நித்தின் மற்றும் மணி (எ) மணிகண்டன் ஆகியோர்கள் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவர்கள் எனவும், மேற்படி எதிரிகளின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு சம்மந்தப்பட்ட காவல் நிலைய காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் அடைக்க ஆணையிட்டார். அதனை தொடர்ந்து எதிரிகள் மீது குண்டர் தடுப்பு சட்ட ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision